Friday, July 21, 2023

தங்க ஜெயராமன் எழுதிய காவிரி வெறும் நீரல்ல

 

வெளியீடு : க்ரியா, புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு,

காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை - 600 041. கைபேசி: +91-72999-05950 மின்னஞ்சல்: crea@crea.in creapublishers@gmail.com

பக்கங்கள் : 96

விலை ரூ 160

ஒவ்வொன்றையும் நாம் ஒரு‍ கோணத்திலிருந்து‍ இருந்தது‍ மட்டுமே பார்த்து‍ முழுமையை பார்க்கத் தவறிவிடுகிறோம். இது‍ ஐந்து‍ பார்வை திறன் இல்லாதவர்கள் யானையை உணர்ந்த விதமாக மட்டுமே இருந்து‍ விடுகிறது. இப் புத்தகத்தின் கட்டுரைகள் ஒரு‍ கோணத்திலிருந்து‍ பார்க்கப்பட்டு‍ முழுமையையும் தெளிவாக பார்க்கிறது.

காவிரி அதனை ஆறாக பார்ப்பதா? விவசாயத்திற்கு‍ உதவும் நீராக பார்ப்பாதா? அல்லது‍ வேறு‍ எப்படி‍ப் பார்ப்பது? காவிரி அதன் பண்பாடு‍ மற்றும் கலாச்சார மாற்றங்களை எவ்வாறு‍ பார்க்க வேண்டும்? முற்காலந்திலிரு‍ந்து‍ காவிரியில் ஏற்பட்டு‍ வரும் அனைத்து‍ மாற்றங்களு‍ம் கட்டுரையில் உள்ளது‍. எழுத்து நடை, பொருள் பொதிந்து‍ தெளிவாகவும் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் உள்ளது.

காவிரிக் கரையில் நிகழ்ந்த ஓட்டங்கள்‍ எளிதாகப் எழுதப்பட்டுள்ளது‍. மாற்றங்கள் நடந்து‍ கொண்டே தான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது‍ என்ற மார்க்ஸ் கூற்று‍ நாம் அறிந்தே. காவிரிக் கரையில் நடந்த மாற்றங்களை எவ்வாறு‍ பார்க்கப்பட வேண்டும், மேலும் மாற்றங்களின் காரணிகள் நம் முன் வைக்கப்படுகிறது‍.

நீரின்றி அமையாது‍ உலகு. நீர் இருக்கும் இடங்களில் மக்கள் இருப்பர். ஓடி‍ வரும் நீரில் தங்களுக்கு‍ தேவையான அளவு பயன்படுத்தி ஆற்றி கரையாரங்களை பண்படுத்தி மக்களும் செழிப்புற்று‍ வண்பாடுகளை வளர்த்தனர் என்பது‍ வரலாறு.

எவ்வாறு‍ நாடு‍ என்பது‍ இடப்பரப்பு இல்லை, மக்கள் தான் நாடு‍ என்ற உண்மையின் வழியில் காவிரி என்ற ஆற்றின் கதையை நமக்கு‍ அளிக்கப்படுகிறது‍. யதார்த்த உண்மைகளை மட்டுமே கட்டுரைகள் பேசுகின்றன. பாசாங்கு‍ மற்றும் பழம் பெருமைகளைப் பேசி மெய்யை மறக்க வைக்கும் முயற்சிகளிலிருந்து விலக்கி உண்மையை உணர வைக்கிறது‍ இப் புத்தகம்.

முற்காலங்களில் அந்த அந்தப் பகுதி விவசாயிகளுக்கு‍ நீர்நிலைகளில் உள்ள வண்டல் எடுக்கும் உரிமை இருந்தது‍. இதனால், நீர்நிலைகளும் முறையாகத் தூர் வாரப்பட்டு வந்தன. நிலங்களும் வளமாயின. விவசாயகிளும் வளமாய் இருந்தனர். பாசன அமைப்பு பராமரிப்பு அதிகாரங்களை மக்களிடமிருந்து‍ இருந்து‍ பறித்து‍ அரசு‍ எடுத்து‍ அதிகாரங்களைத் தன் கைக்குக்‍ கொண்டு‍ வந்து‍ மையப்படுத்தியதால் தீமைகள் மட்டுமே விளைந்தது.‍ காவிரி சிக்கல் என்பது‍ வெறும் நீர் உரிமை சிக்கல்கள் மட்டும் அல்ல அவற்றில் மற்றும் பல அடங்கியுள்ளன என்பதைக் கட்டுரை வாயிலாக நாம் தெரிந்து‍ கொள்ளலாம்.

விவசாய வளர்ச்சி என்பது‍ உண்மையில் என்ன என்பதும். வளர்ச்சி என்ற வெற்று‍க் கூச்சல்களிலிருந்து‍ விடுபட்டு‍த் தெளிவை நோக்கி நடப்பதற்குக்‍ கட்டுரைகள் நமக்குப்‍ பெரிதும் உதவும்.

விழாக்கள் என்றாலே மகிழ்ச்சி. காவிரி அங்கு‍ நடைபெறும் விழாக்கள் அந்த பகுதி மக்களுடன் எவ்வாறு‍ கலந்து‍ வந்துள்ளது‍ என்பதும் அந்த மகிழ்ச்சி தரும் முகமலர்ச்‌சி கேமிராவின் முன் சிரிக்கும் பொய் சிரிப்பாக மாறிய விதம் போல பொங்கல் விழாவின் மாற்றங்கள் சொல்லப்பட்ட விதம் தனித்தன்மையானது. அதே சமயத்தில் அந்த உண்மை நமக்குக் கசக்கும் என்பதே உண்மை. பொங்கல் விழா எவ்வாறு‍ அதன் உண்மைத் தன்மை இழந்து‍ வெறும் பார்வையாளர்கள் பார்வைக்காக நடத்தப்படும் மாறுதலுக்கு‍ விளைந்த கதையை நமக்குச்‍ சொல்கிறார்.

காவிரியின் வறட்சிக்கான காரணங்கள், விவசாயிகளின் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆராய்ந்து‍ வெளிப்படுத்தப்பட்டுளள்ன. அதே பொழுது‍ தற்போது‍ நீர் இல்லா காவிரி எந்த மாற்றங்களைத் தந்துள்ளது‍ என்பதும்‍ பதிவு செய்யப்பட்டு‍‍ படிப்பவர் மனங்களிலும் வேதனையை விளைவித்து‍‍ விடுகிறது‍.

கலாச்சாரச் சந்தை கோயில்களை நுகர்பொருளாக மாற்றியுள்ளது. அறிவியல் அனைத்துக்கும் விடை தராது‍. நீதிமன்ற தீர்ப்புகள் எதனையும் சாதித்து‍ விடப்போவது‍ இல்லை. இது‍ போன்ற உண்மைகளை புத்தகம் வெளிப்படுத்தி காட்டுகிறது.

நெல்லைக்கும் காவிரிக்கும் உள்ள ஒற்றுமைகள், வெற்றிலைக் கலாச்சாரம், காவிரிக் கரையில் பூக்கும் பூக்கள், வயல்களில் மீன்கள் இருந்தமை, காவிரி தந்த கருணாநிதி எனப் பல செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

பாட மொழி என்ற ஒன்றினை நமக்கு‍ அடையாளம் காட்டி‍ அதன் குறைகளைக் கூறி அதனைக் களைய வழிகளும் சொல்லப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் வழியாகவும் மாற்றங்களையும் அதனால் விளைந்த தீமைகளை வெளிச்சம் போட்டுக்‍ காண்பிக்கிறார். சாதி மற்றும் அதன் அரசியலினால் இழந்த பன்முகத் தண்மையை நமக்கு‍ அடிக் கோடு‍ இட்டுக் காட்டப்படுகிறது‍.

காவிரி அது‍ ஒரு‍ வரலாறாக மட்டுமே இருந்து‍ விடக் கூடிய அபாயமாக மாறக் கூடிய நாள் வெகு‍ தொலைவில் இல்லை என்பது‍ நமக்கு‍ வேதனையளிக்கக் கூடிய செய்தியாகும்.

Wednesday, April 6, 2022

பால்ராஜ் கென்னடி எழுதிய உணர்வுகள் சில சித்திரங்களாய்

 

வெளியீடு

கென்னடி மீடியா, சென்னை

செல் : +91 9940 667 881, + 91 9940 350 460

விலை : ரூ 200/-

உணர்வுகளை தன் எழுத்துகள் வழியாக நம் கண் முன்னே அழகாய் படம் பிடித்துக் காட்டி விடுகிறார். கதையாசிரியர் ஒளிப்பதிவாளர் என்ற முத்திரையை ஒவ்வொரு கதைகளிலுமே பதித்து விடுகிறார். கதையுடன் நாமும் சேர்ந்து பயணிக்கும் உணர்வினை நமக்குத் தந்து விடுகிறார்.

கதைகளை தொகுப்பாகக் கொண்டு வரும்போது ஒரே மாதிரியான நிகழ்வுகள் வரும் கதைகளைத் தவிர்த்திருக்கலாம். மேலும் கதையாக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.