ஞாயிறு, 18 அக்டோபர், 2026

ஜெயிலர் 2 — திரை விமர்சனம்

திரைப்படங்கள் மிகைப்படுத்தல் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைக்கும் இடையே உள்ள ஒரு நுட்பமான சமநிலையைத் தக்க வைக்க வேண்டும். தாக்கத்திற்காகச் சினிமா பெரும்பாலும் யதார்த்தத்தைப் பெரிதுபடுத்திக் காட்டினாலும், பார்வையாளர்களைத் தக்கவைக்க அது தன் கதையின் உள் முரண்பாடற்ற தன்மையையும் (internal consistency) கட்டமைப்புத் தர்க்கத்தையும் (structural logic) பராமரிக்க வேண்டும். அவ்வாறு ஒரு கதை "சரியாகப் பொருந்தும்போது", அது ஒரு சிறந்த திரைப்படமாக அமைகிறது.
‎
‎அவ்வாறு, கதையின் விதிகளையும் தர்க்கத்தையும் மிகக் கச்சிதமாக மதித்து, ஒரு சிலந்தி வலை போலப் பார்வையாளர்களின் நெஞ்சையும் கதையின் வில்லன்களையும் நேர்த்தியாகச் சிக்க வைக்கும் திரை அனுபவமாக வந்துள்ளது 'ஜெயிலர் 2'.
‎
‎முதல் பாகத்தின் தொடர்ச்சியாகக் கதைக் களம் விரிவடைந்தாலும், 'ஜெயிலர்' பார்க்காதவர்களுக்கும் உணர்ச்சிப் பின்னணியும் தொடர்ச்சியும் எளிதில் புரியும் வண்ணம் மிகக் கச்சிதமான ஓர் அறிமுகத்தோடு கதை தொடங்குகிறது.
‎
‎'டைகர்' முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்) தன் சொந்த மகனையே தன்னுடைய கையால் கொல்ல நேரிட்ட அந்தப் பெருங் குற்றவுணர்ச்சி (Guilt) ரஜினியின் முகபாவனைகளில் மிக ஆழமாக வெளிப்படுகிறது. தன் மனைவி விஜி (ரம்யா கிருஷ்ணன்) மற்றும் மருமகள் ஸ்வேதா (மிர்னா) ஆகியோருக்குத் தெரியாமல் அதை மறைக்க அவர் கூர்மையாக முயலும் காட்சிகள், கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான ஆழத்தைக் கூட்டுகின்றன.
‎
‎முத்துவேல் பாண்டியன் செய்யும் அனைத்து நகர்வுகளுக்கும், போடும் மாஸ்டர் பிளான்களுக்கும் பின்னணியாக அந்தச் சிலை கடத்தல் வலைப்பின்னலே கதையின் முக்கிய அடித்தளமாக விளங்குகிறது.
‎
‎மாபெரும் சக்தியும் கதையின் அடித்தளமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற மாபெரும் ஆளுமை திரையில் இருந்தாலும், வெறும் மிகைப்படுத்தப்பட்ட (exaggerated) மாஸ் காட்சிகளுக்காகக் கதையின் தர்க்கத்தை நெல்சன் தியாகம் செய்யவில்லை.
‎
‎விமல் (யோகி பாபு) மற்றும்  பழக்கடை மூர்த்தி (நமோ நாராயணா) வழங்கும் நகைச்சுவை கலந்த இயல்பான சேட்டைகள் மூலம் கதையின் தொனி அமைக்கப்படுகிறது. குறிப்பாக, வெறும் உடல்மொழி சார்ந்த சிரிப்பைத் தாண்டி, கூர்மையான வசனங்கள் வழியாக ஜோக் சொல்லப்படுவது படத்தின் சீரியசான சூழலையும் எளிதாக்குகிறது.
‎
‎சிலை கடத்தல் கும்பலின் பின்னணியில் வரும் புதிய எதிரியான போதி கல்பாக் (எஸ். ஜே. சூர்யா) அறிமுகமாகும் விதம் கதையின் கருவை ஆழமாக விதைக்கிறது. எஸ். ஜே. சூர்யா தன் வழக்கமான திரையரங்குத்தனமான (Theatrical) அதீத வெளிப்பாடுகளைக் குறைத்துக்கொண்டு, மிரட்டலான அமைதியைக் கையாண்டுள்ளார். அந்த அளவான வெளிப்பாடே அவரை ஒரு உண்மையான, பயங்கரமான வில்லனாகத் திரையில் உயர்த்திக் காட்டுகிறது!
‎
‎இருப்பினும், வித்யா பாலனின் கதாபாத்திரம் கதைக்கு எந்த வகையிலும் பெரிய பலம் சேர்க்காமல், ஏனோ அடுத்த படத் தொடர்ச்சிக்காக (Sequel-க்காக) மட்டுமே பலவந்தமாகத் திணிக்கப்பட்டது போலத் தோன்றுவது படத்தின் மைனஸ்.
‎ 
‎படத்தில் கட்டமைப்புத் தர்க்கமும் புதிரும் (Structural Logic & Suspense) நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளன. படத்தில் முத்துவேல் பாண்டியன் செய்யும் ஒவ்வொரு நகர்வுக்கும் ஒரு தெளிவான தர்க்கரீதியான காரணம் இருக்கிறது. அவை முதலில் புரியாமல் இருந்தாலும், இறுதியில் கதையின் உள் முரண்பாடற்ற தன்மையை உறுதிசெய்து விடுகின்றன. நகைச்சுவை கலந்த பயத்துடனும் அதீத நம்பிக்கையுடனும் வலம்வரும் பழக்கடை மூர்த்தி மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற கதாபாத்திரங்களுக்கே முத்துவேல் பாண்டியனின் அந்தத் திட்டம் என்னவென்று உடனடியாகத் தெரியாமல் இருப்பது, திரையரங்கில் பார்க்கும் நமக்கும் ஒரு சஸ்பென்ஸாக மாறி பெரும் ஆவலைத் தூண்டுகிறது. இறுதியில் அந்த முடிவுகளுக்கான காரணம் வெளிப்படும்போது, கதையின் "சரியான பொருத்தம்" (Internal Consistency) பார்வையாளர்களை வியக்க வைக்கிறது.
‎
இறுதிச் சண்டைக்காட்சி
‎போதி கல்பாக் (எஸ். ஜே. சூர்யா) மற்றும் அவரது ஆட்களுக்கு எதிராக முத்துவேல் பாண்டியன் நடத்தும் படத்தின் கடைசிச் சண்டைக்காட்சி அதிவேகமாகவும், துல்லியமான கோணங்களுடனும் பிரம்மாண்டமாக இருந்தபோதும், ஒரு வீடியோ கேமின் பதிவுசெய்யப்பட்ட அமர்வு போல (Recorded session of a video game) அமைந்து ஒரு கேமிங் அனுபவத்தை மட்டுமே தருகிறது.
‎
‎ரஜினியின் குற்றவுணர்ச்சி கலந்த அபார நடிப்பு, மிகைப்படுத்தல்கள் அற்ற இயல்பான வில்லத்தனத்தால் மிரட்டும் எஸ். ஜே. சூர்யா, சிலை கடத்தல் பின்னணி, அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை, நக்கல் கலந்த வசனங்கள் ஆகியவற்றுடன் மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, யோகி பாபு, மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், ஜாக்கி ஷெராஃப், விஜய் சேதுபதி, விநாயகன், ஜட்டின் சர்னா, ஹக்கீம் ஷாஜஹான், நோரா ஃபதேஹி, பூர்ணா என அனைவரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
‎
‎ஒட்டுமொத்தமாக இந்த கதை வலை ஒரு சிறந்த பொழுதுபோக்கு சினிமா

சனி, 26 செப்டம்பர், 2026

மீசையை முறுக்கு 2 திரை விமர்சனம்

கான முயலெய்த அம்பினில் யானை
‎பிழைத்தவேல் ஏந்தல் இனிது.  
‎
‎தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
‎மெய்வருத்தக் கூலி தரும்.

திங்கள், 14 செப்டம்பர், 2026

மண்டாடி - திரை விமர்சனம்

 

கடல் அழகு

அலை அழகு

சுழல் அழகு

படகு அழகு

படகுப் பந்தயம் அழகு

வெற்றிக் கோப்பை அழகு

கடற்கரை அழகு

தர்கா அழகு

கோவில் அழகு

நீச்சல் குளம் அழகு

ரவீந்திரா விஜய் நடிப்பு அழகு

இவ்வளவு அழகு

மண்டாடி

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

கோவில் ஒலிபெருக்கிகள்: பக்தியா? பொதுமக்களுக்கு இடையூறா?

நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் அல்லது உங்கள் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் உங்கள் காதுகளுக்குள் வந்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், உங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியுமா அல்லது வேலைதான் செய்ய முடியுமா? நீங்கள் அவர்களை என்ன செய்வீர்கள்? விரட்டியடித்து விடுவீர்கள் அல்லவா?
ஆனால், நம் நாட்டில் அது முடியாது. ஏனென்றால், அந்த காதில் வந்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது கோவில்களில் 'இறைவனுக்காகஓதும் மந்திரங்கள்' என்று சொல்லிக்கொண்டு, ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே நம் காதுகளையும் புண்ணாக்கி, நம் மனதையும் புண்ணாக்கி, நம்மையும் புண்ணாக்கி, நம்மைச் சீக்கிரமே சாகடிக்கச் செய்யும் கோவில்கள்
இதை எதிர்த்து நாம் சட்டத்தை நாடினோம் என்றால், சட்டமும் மௌனமாகிவிடுகிறது. அதிலும் கொடுமை என்னவென்றால், சட்டப்படி இந்தக் கோயில்கள் செய்வது எதுவுமே சட்டத்திற்கு உட்பட்டதல்ல; ஒலிக்கும் டெசிபல் அளவுகளும் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. ஆனாலும் சட்டமும் அவர்கள் பக்கம்! நம்மால் எதிர்த்தும் அவர்களிடம் பேச முடிவதில்லை; ஏனென்றால், கோயில்களை நடத்துபவர்கள் ரௌடிகளாகத்தான் இருக்கிறார்கள்.
நம் வாழ்வு சாவை நோக்கித்தான்; ஆனால், அந்தச் சாவை இந்தக் கோயில்கள் விரைவாக்கிக்கொண்டே இருக்கின்றன. வாழ்வதற்காகக் கட்டப்பட்ட கோவில்கள், சாக வைப்பதைத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றன.

சனி, 15 ஆகஸ்ட், 2026

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் - திரை விமர்சனம்

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஒரு விளையாட்டுப் பற்றிய படம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அது ஒரு தாய்-மகன் பாசப் படம் என்று நினைக்க வைத்து, இல்லை அது ஒரு உணர்வுப்பூர்வமான கதை என்று மாறி, காமெடி படம் என்று நம்மை நினைக்க வைத்து, குடும்ப உறவுப் படம் என்று மாறி, ரொமான்ஸ் படம் என்று மாறிய ஒரு சஸ்பென்ஸ் படம்.
சூர்யா அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வுகளை அதிகமும் கொடுக்காமல், குறைவாகவும் கொடுக்காமல் ஒரு மில்லிமீட்டர் கூடப் பிசகாமல் நடித்திருக்கிறார்.
சூர்யாவின் அலுவலகத்திலும் வீட்டிலும் இருப்பவர்களின் நடிப்பு மிக மிக இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பு அழகோ அழகு!
மமிதா பைஜு எவ்வாறு ஆட்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் என்பதை அவர் வீட்டிலும், அவர் படிக்கும் இடத்திலும், சூர்யாவின் அலுவலகத்திலும் வீட்டிலும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
மமிதா, ராதிகாவிடம் சூர்யாவைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லும்போதும், ராதிகாவை "அத்தை" என்று கூப்பிடும்போதும், உணர்ச்சிகளின் இயல்பான நடிப்பில் ராதிகாவா அல்லது மமிதா பைஜுவா என வியக்க வைக்கின்றனர்.
படம் சில இடங்களில் கருத்துகளைச் சொல்லும்போது ஏற்படும் ஒருவிதச் சலிப்பைக் கேமராவும் இசையும் நேர் செய்துவிடுகின்றன.
பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்', 'அழகன்' திரைப்படங்களில் வயது வித்தியாசம் கொண்ட காதல் தோல்வியுற்றதை, 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இயக்குநர் வெற்றி பெற வைத்துவிட்டார்.
சொன்னதில் ஏதோ ஒன்றை விட்ட குறை இருப்பது போல் தெரிகிறதே... ஆம், கதை! ஒரு பொழுதுபோக்குப் படம் பொழுதை அழகாகப் போக்குகிறது என்கிறபோது, இல்லாத கதையைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பக்திப் பரவசம்

பக்தி வேடம் கொண்டு
'ஒலி' பெருக்கி
அடுத்தவர் வீட்டினுள்
இரைச்சலாய்
அத்துமீறி நுழையும்
'பக்தி'மான்கள்

புதன், 29 ஜூலை, 2026

சத்தமே சாமி

ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்

போகும் வரும் வழியடைத்து
தெருவெங்கும் பந்தல்
தெருவை உடைத்து பாழாக்கி

தெருவடைத்து
வழியடைத்து

காட்டுக் கூச்சலாய்
ஒலி பெருக்கி பாடி

மக்கள்
உயிர் வாழ
கண் காது வாய் முடவைத்து

தனக்கென 
அம்மனும் 
கண் மூடிக்கொள்ள

சாதி மதமென
சட்டமும்
கண் மூடிக்கொள்ள

ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு...