டீ குடிப்பது போல வங்கியை கொள்ளையடிப்பது அவ்வளவு எளிது.
பிடிபட்ட திருடன் மீது தீர்க்கப்படாத எல்லா வழக்குகளையும் சுமத்துவதுதான் போலீஸ் வேலை. சாட்சிகள் இங்கே தேடப்படுவதில்லை, 'உருவாக்கப்படுகின்றன'.
கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாரும் விவசாயத்தை விடாமல் அங்கேயே இருப்பவர்கள்.
வங்கியின் தொழில் பொது மக்களை ஏமாற்றுவது மட்டுமே.
தன் காதலன் திருடன் என்று தெரிந்தும், கண்ணை மூடிக்கொண்டு காதலித்துத் திருமணம் செய்வதுதான் கதாநாயகியின் ஒரே வேலை.
மனைவியைப் பொறுப்புடன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவளை விடுதியில் தனியாக விட்டுவிட்டு வருவதுதான் இந்தப் படத்தின் 'உன்னதமான' பொறுப்புணர்வு!
கதாநாயகன் மனம் மாற வேண்டும் என்பதற்காகவே தந்தை சென்டிமென்ட்டாக இறந்து போவார். இது தான் தந்தை பாசம்.
வங்கியின் மேலதிகாரியே கூலிப்படை வைத்துத் தன் வங்கியைக் கொள்ளையடிப்பார். இதுவே வில்லத்தனம்.
செய்தித்தாள் முதல் பக்கத்தில் இடம் பிடிக்க ஒரு போலீஸ் அதிகாரி சட்டத்திற்குப் புறம்பான எதை வேண்டுமானாலும் செய்வார்.
இதுதான் 'கர'.
ஒரு படம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இப்படத்தை ஒரு பாடமாகவே வைக்கலாம்!
படம் நடைபெறும் அந்த காலகட்டம் (Period Setting) மட்டுமே ஓரளவிற்கு படத்தில் ஆறுதலான அம்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக