வீடாம் வீடு
நம் வீடு
பாதுகாப்பாய்
தங்கிடவும்
மகிழ்ச்சியாய்
மகிழ்ந்திடவும்
உடல் நலமாய்
வாழ்ந்திடவும்
மனம் நலமாய்
வாழ்ந்திடவும்
மரங்கள் சூழ
இருந்திடும்
வீடாம் வீடு
நம் வீடு
கோயில் இல்லா
ஊரில் குடியிருக்க
வேண்டாம்
என்ற ஒளவை
சொல்லுக்கிணங்க
இருக்கும்
வீடாம் வீடு
நம் வீடு
அதிகாலையில்
காட்டுக் கத்தும்
ஒலிபெருக்கியில்
அனைவர் தூக்கம்
கலைத்திடுமாம்
பள்ளிவாசல்
தொடரும்
பேரொலி
சர்ச்சுகளும்
கோவில்களுமே
போட்டி போட்டுக் கொண்டே
உள்ள நலமும்
கெட்டதாம்
உடல் நலமும்
கெட்டதாம்
மகிழ்ச்சியுதாம்
தொலைந்ததாம்
பாதுகாப்பும்
காணாமல் போனதாம்
அறிவிற் சிறந்த
ஒளவை வாக்கும்
பொய்யாய் போனதாம்
செவ்வாய், 21 ஏப்ரல், 2026
வீடு… அமைதி?
திங்கள், 13 ஏப்ரல், 2026
ரயில் நிலையம்… மக்களுக்கா?
ரயில் நிலையம்
ரயிலைப் போல
மிகப் பெரியதாய்
பல வழிகள்
மக்கள் -
உள்ளே செல்லவும்
வெளியே போகவும்
நவீனம்
என்ற பெயரில்
வழிகள் அடைத்து
அடிப்படைத் தேவைகள்
தவிர்த்து
அழகுபடுத்தி
மக்களுக்கான
இடங்களை ஆக்கிரமித்து
கட் அவுட்கள் வைத்து
மக்களுக்கான
ரயில் நிலையம் -
மக்களைப்
புறக்கணித்ததே
யாருக்கான நிலையம்?
பேரூந்து நிலையம் -
கடைகளாய்
கோவில்களாய்
அவற்றின் ஆக்கிரமிப்புகளாய் ...
பேருந்துகள்?
மக்கள்?
ஒரு பயணமே போதும்
அரசுப் பேருந்துகள் -
மக்களைக்
கால்நடைகள் போல்
நினைக்கும்
இருக்கை
ஒருவர் உட்கார கூட
வசதி அற்று
ஒடுக்கமாய் -
குறுக்கமாய்
அரசுப் பேருந்து நிறுவன
தலைவர்களும்
அவர்களின் அணியினரும்
கார்களைத்
தவிர்ந்து
பேருந்துப் பயணமே
செய்ய வைத்தாலே
புரியும் -
புரிய வேண்டியது
பழையதுக்கு திரும்ப…
காட்டை
அழித்து திருத்தி
ஊர் செய்தான்
நாட்டைக் கைபற்றி
தன் அரண்மனை
தன் கோவில்
ஆக்கினான்
மறுபடியும்
மற்றொருவன்
நாட்டைக் கைபற்றி
தன் அரண்மனை
தன் கோவில்
ஆக்கினான்
இப்படியே ...
தற்போது
பழையது திரும்ப
வேண்டுமாம்
அந்தக்
கோயிலாய்
மாற்ற வேண்டுமாம்
போராட்டம்!
போராட்டம்!!
பழையது திரும்ப
வேண்டும் எனில்
காடாய் தானே
ஆக்க வேண்டும்
அது தானே -
நியாயம்
தர்மம்
சாமியாகும் ஆசாமிகள்
சாமி
ஊர் சுற்றிப் பார்க்க...
ஆசாமிகள்
செல்லும் பாதை ...
மறிக்கப்பட்டு -
மாற்றப்பட்டு
பார்த்து பார்த்து -
சாமியாகும்
அரசியல்வாதிகள்
ஞாயிறு, 12 ஏப்ரல், 2026
அமைதியின் கனவு
அன்று ஒரு நாள்
சாலையில்
அமைதியாய்
ஹார்ன் ஒலி
இல்லாமல்
ஒழுங்கான திசையில்
நம்ப முடியாமல்
நான்...
எழுந்தது
திடீரென
ஒரு பெரும் ஒலி
என் நெஞ்சுக்குள்
உள் இறங்கியது
விழித்து எழுந்ததேன் -
எல்லா நாளும் போல்
வழிப்பாட்டுத் தலத்தின்
பேரோலி
கனவு
கனவாய் போனதுவே
என் சாவை
வேகப் படுத்தும் -
வழிப்பாட்டுத் தலங்கள்
வியாழன், 9 ஏப்ரல், 2026
வாழ்வதே வாழ்க்கை
கனவு -
காண்வதற்கே
கனவு
வாழ்க்கை -
வாழ்வதற்கே
வாழ்க்கை
கனவு கண்ட
வாழ்க்கையையே
வாழ்வதையே -
வாழ்க்கையாய்
கொள்.
இரண்டு ஆறாய்!
இருவர்
சந்திப்பு
பல பேரின்
சந்திப்பாய் -
ஓன்று -
நான்
இரண்டு -
நீ
மூன்று -
நான் நினைக்கும் நான்
நான்கு -
நீ நினைக்கும் நீ
ஐந்து -
நான் நினைக்கும் நீ
ஆறு -
நீ நினைக்கும் நான்
சந்திப்புகள்
கடினமாய்
வாழ்வின் திருப்பம்
திருமணம்
ஒரு குறிக்கோளின்
முடிவில்லை —
பயணத்தின்
திருப்பம்
ஒரு
நிலை
ஒரு
பாதை
காதலியுங்கள்
உங்கள் துணையை
வாழ்நாள்
எல்லாம்
புதன், 8 ஏப்ரல், 2026
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
பிரச்சாரங்கள்
செய்யாத
மனமாற்றத்தை
கல்வெட்டுகள்
சிலைகள்
செய்து விடுமாம்
தேர்தல் ஆணையம்
முடுங்கள்
கல்வெட்டுகள்
சிலைகளை
முடியபின் -
மக்கள் கேட்டார்கள்
இங்கே
என்ன இருந்தது
எனக் கேட்டார்கள்...
ஞாபகம்
வந்தது -
மக்களுக்கு
மறந்ததை
ஞாபகம் படுத்தும் -
தேர்தல் ஆணையம்
திங்கள், 6 ஏப்ரல், 2026
ஒலிக்கும் அதிகாரம்
ஏதோ
தாங்கள அறிவிக்காவிட்டால்
பூமி சுற்றுவதை
நிறுத்திவிடும்
என
மணிக்கு
ஒரு தரம்
நேரத்தை
அதித ஒலியில்
நேரத்தை
அறிவிக்கும்
சர்ச்சுகள்,
கோவில்கள்
மனிதன் -
முன்னேறவே
இல்லை
நேரம் பார்க்கத்
தெரியாது
என நம்பும்
சர்ச்சுகள்,
கோவில்கள்
மனிதன் -
முன்னேறிடவே
கூடாது
என
வேலை செய்யும்
அவை.
முன்னேற்றம் பெற -
விடுபடுங்கள்
வழிபாட்டு தலங்களின்
அதிகாரத்திலிருந்து.
இயல்பாய் தன் இயல்பு
தன் இயல்பு
அறி
அதை
செயல்படுத்து
இயல்பாய்
செயல்படுத்த
விளையாட்டாய்
மாறி
எளிதாய்
புது படைப்புச்
சிந்தனையாய்
மலரும்
போதையைத் தேடும் தும்பி
மகரந்தம்
தேடி வாழும்
தும்பியே!
உன் விருப்பம்
சொல்லாமல்
உள்ளதை
உள்ளபடி
சொல்வாயாக
இது
குறுந்தொகை
சொல்வது
பத்திரிக்கையாளர்களின்
பாலபாடமும்
இதுவே
ஆனால்
உண்மை -
பணம்
புகழ்
காமம்
போதை
ஆசையே
கொள்கையாய்.
தன்விருப்பம்
தொலைத்து விட்டு
கொடுப்பவன்
சொல்லவதே
செய்தியாய் -
பத்திரிக்கையாளர்களின்
புது நெறி
பிரம்ம முகூர்த்தம்
பலன் பலவாகும்
என்ற
வாய்ச் சொல்
கேட்டு
நம்பி
தூக்கம் தொலைத்து
குளித்து
தீபம் ஏற்றி
வழிபட்டு
வேலை நேரத்தில்
தூங்கி வழிந்து
வேலையைத் தொலைத்து
திக்கற்று நின்றதே -
பலன்
பக்தியாய்
வாழ்க்கை
இழந்து.
சாக்ரடீஸ் பார்க்காத அரசியல்
அரசியல் என்றால் -
கொள்கைகள்,
உரிமைகள்
நீதி
என்று
நீங்கள் நினைத்தால்
நீங்கள்...
அரசியல் என்பது -
கொடிகள்
ஏந்துவது
முழக்கங்களை
எழுப்புவது
மாற்றுக் கருத்துக்களை
நசுக்குவது
மாற்றுக் கருத்தாளர்களை
மிரட்டுவது
விரட்டுவது
கொலை செய்வது
அவ்வளவே
அரசியல்.
சாக்ரடீஸ் -
பாவம்
போர் யாருக்கு?
போர்
யாருக்கு நல்லது -
போரிடும் வீரர்களுக்கா?
இருக்காது
அவர்கள்
இறக்கலாம்
ஊனம் ஆகலாம்.
போர் வீரர்களின்
குடும்பத்திற்காக?
இருக்காது
அவர்களுக்கும்
இழப்பு
மட்டுமே.
நாட்டு மக்களுக்கா?
இருக்காது
அவர்களுக்கும்
அழிவு
மட்டுமே.
பின்
யாருக்காக? -
அதிகாரத்தைக்
குவித்து
நானே ராஜா
ஆக நினைக்கும்
அற்ப...
மையப்படுத்தல்
மையப்படுத்தல் -
ஓர்
இடத்தில்
குவியும்
அதிகாரம்.
மையத்திலிருந்து -
எதனையும்
அறிய முடியாது
எதனையும்
புரிய முடியாது
ஆட்டிவிக்கலாம்
மனிதர்களை
மனிதர்களின்
தேவை தீர்க்க முடியாது
ஆனால் -
மக்களாட்சியில்
தேர்ந்தெடுக்கப்படும்
பிரதிநிதி
அரியனை
ஏறுவதே
ஆசையாய்...
தீங்கு விளைவிக்காதே?
"முதலில்,
தீங்கு விளைவிக்காதே"
மருத்துவர்களின்
ஹிப்போக்ரடிக் உறுதிமொழி
நலம் குறைந்து
நலமாகும்
என எண்ணி
மருத்துவரிடம் சென்று
சோதனைகள்
பல செய்து
உடம்பைப்
புண்ணாக்கி...
மறந்துவிட்டார் —
மருத்துவர்
ஹிப்போக்ரடிக் உறுதிமொழி
முரணே இசைவாய்
முரண் இல்லா
ஓர் இயல்பாய்
இருப்பது அல்ல -
திருமண பந்தம்.
முரண் பட்ட
இருவர்
முரண்கள் களைந்து
இசைவுடன்
இயங்குவதே -
திருமண பந்தம்.
முரண்படுங்கள்
உங்கள் இணையுடன்
இசைவாய்
வாழ்வு
மலரட்டும்.
நெல் விளைய நெல்லே பலி
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -
மூதுரை வாக்கு
உலக இயல்பு.
அது எப்படி
புல்லுக்குப் போகலாம்
நெல்லுக்கல்லவா
தேவை
என
நெல்லுக்கும்
நீர் வராமல்
தடுக்கும்
அரசின்
கைரேகை,
முகம்,
விழித்திரை
வழி அடையாள
உறுதி
செயல்முறைகள் -
களை களைய
நெல்லே
பலி.
வாய்தா… இல்லை!
சாவு
வந்து விட்டது
செத்து தான் ஆக
வேண்டும்
வாய்தாக்கள்
கிடைக்காது
ஆம் -
அது என்ன
நம்முடைய
நீதிமன்றங்களா!
நம்புவீர்களா? சிந்திப்பீர்களா?
அவன்
மனம் வைத்தால்தான் —
அவனைத் தரிசிக்க முடியும்…
தன்முயற்சியைத்
தடுக்கும்
மதங்கள்
தன்முயற்சி -
ஒருவனை
வளரச் செய்துவிடும்
ஒருவனை
உயரச் செய்துவிடும்
ஒருவனை
தானாக இயங்க வைத்துவிடும்
மதத்திற்கு
வேலை இல்லாமல் செய்து விடும்
எனவே -
அவன்
மனம் வைத்தால்தான் —
அவனைத் தரிசிக்க முடியும்…
என
நம்பவைக்கும் மதம்.
நம்பினோர்
கெடுவதில்லை
இது
நான் மறை வாக்கு
நம்புவீர்களா?
சிந்திப்பீர்களா?
மூடிய உணர்வுகள்
விடுமுறை நாட்களிலும்
பள்ளிகள்
அனைவருக்கும்
தெரிகிறது
கல்வித் துறை
கண்களை
மூடிக் கொள்கிறது
தண்ணீர் வண்டிகளின்
அதீத ஹார்ன் ஒலி
அனைவருக்கும்
கேட்கிறது
போக்குவரத்துத் துறை
காதுகளை
மூடிக் கொள்கிறது
குப்பைகளின் துர்நாற்றம்
அனைவருக்கும்
துர்நாற்றமாய்
(மா)நகராட்சி பஞ்சாயத்து
மூக்குகளை
மூடிக் கொள்கிறது
மௌனமானது -
அரசு
செத்தது -
மக்களாட்சி
நாய் > மக்கள் ?
"தெரு நாய்களை
கட்டுப்படுத்துங்கள்
விரட்டுகிறது
கடிக்கிறது"
மக்கள்
"நாய்
விரட்டத்தான் செய்யும்
நாய்
குரைக்கத்தான் செய்யும்
நாய்
எங்களை எல்லாம்
கடித்ததே இல்லை"
என்றுமே
காரில் செல்லும்"
ஜீவகாருண்ய அன்பர்கள்
அரசும்
எப்பொழுதும் போல்
ஜீவகாருண்ய அன்பர்கள்
பக்கமே!
மக்களா -
அது யார்?
நிர்வாக காரணங்களினால் ...
"மக்களின் பணத்தில்
சேவை செய்ய..."
"யாருக்கு?"
"மக்களுக்காகத் தான்
நம்புங்கள் மக்களே"
"நிர்வாக காரணங்களினால்...
மக்களுக்கான சேவை —
திடீரென மறுக்கப்படும்.
காரணம்?
நிர்வாக காரணங்களினால்..."
இதுவே -
வெளிப்படைத் தன்மை
இயங்கும் தன்மை
"நம்புங்கள் மக்களே
மக்களுக்காகத் தான்"
சுதந்திர நாட்டின் அடிமைகள்
அதிகாரம்
மக்களை
அடிமையாகவே வைத்திருக்கிறது
அரசியல்
மக்களை
அடிமையாகவே வைத்திருக்கிறது
சட்டம்
மக்களை
அடிமையாகவே வைத்திருக்கிறது
மக்களாட்சி
மக்களை
அடிமையாகவே வைத்திருக்கிறது
வாங்கிவிட்டோம்
சுதந்திரம்...
உருவாக்கிவிட்டோம்
மக்களாட்சி!!!
சனி, 4 ஏப்ரல், 2026
தேர்தல்
ரோட்டில்
காரில் செல்லவதே
குற்றம் என
மக்கள்
என் அடிமைகள்
அவர்களுக்கு ஏன்
மரியாதை என
மரியாதையின்றி
விசாரிக்கும்
அதிகார வர்க்கம்
சாமாணிய மக்கள்
கொண்டு செல்லும்
சில லட்சங்களைப்
பறிமுதல் செய்து
தேர்தல் பட்டுவாடாவை
தடுத்து நிறுத்திவிட்டேன்
என்று மார்தட்டும்
அதிகார வர்க்கம்
இதுவல்லவோ
மக்கள் வதை பார்க்காமல்
அதிகாரமே நம் தோழர்கள்
என இச்செய்தியை
சிறப்பாய் வெளியிடும்
பத்திரிக்கைகள்.
மக்களுக்கு துணை
செத்துவிட்ட
மக்களாட்சி மட்டும்.
அதிகாரம்
அதிகாரம்
என்ன செய்யும் -
அத்துமீறும்
துன்புறுத்தும்
தவறு செய்யும்
உரிமை மீறும்
கொடுமைப் படுத்தும்
செய்ய வேண்டியதைக்
தவிர்த்து ...
அனைத்தையும்
செய்யும்.
விதைத்தது தான் விளையும்
பள்ளிக்கூடம்
என்ன செய்யும்?
கற்றுக் கொடுக்கும்.
எதை?
குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.
ஊரில்
ஒரு பள்ளிக்கூடம்
பள்ளிக்கு
செயல்படும் நேரம்
உண்டு
பள்ளி
செயல்படும்!
குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.
பள்ளி வாகனம் -
குழந்தைகளை
நாள்தோறும்
பள்ளி ஆரம்பிக்கும்
வேளை தாண்டியும்
கொண்டு வந்து சேர்க்கும்
ரோட்டில்
நிறுத்தப்படும்
போக்குவரத்துக்கு
இடையூறாக
இடையூறு என்றால் —
மிரட்டி, விரட்டும்
ஆசிரியர்கள்.
பள்ளிவேளை
முடியும் முன்னே
குழந்தைகளை
நாள்தோறும்
வீட்டுக்கும்
கொண்டு போய் சேர்க்கும்.
குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.
விதை ஒன்றை
விதைத்து விட்டு...
விளையும்
எனக் காத்திருக்கும்...
விளையும் -
நல்லது?
வெள்ளி, 3 ஏப்ரல், 2026
சிந்திக்காதே
சிந்தியாது இரு
மனமே
அறியாமையே
ஆனந்தம்
அறியாமையே
பேரின்பம்
சிந்தியாது இரு
மனமே
மாற்றங்களை
உருவாக்குவது
நீ அல்ல
மாற்றங்கள்
உன்னை கேட்டு
மாறுவது அல்ல
சிந்தியாது இரு
மனமே
மாற்றம்
நீ அல்ல
வாழ்க்கை
வாழ்வதற்கே
சிந்தியாது இரு
மனமே
அதுவே
அமைதி
அதுவே
சாந்தம்
என்றும்
யாருக்கோ
அடிமையாய்
சிந்தியாது இரு
மனமே
ஆக்கிரமி
தன் இருப்பை
காண்பிக்க
ஆக்கிரமி -
ஒலியால்
ஒளியால்
இடங்களை
ஆக்கிரமித்தல் ஒன்றே —
உன்னை
மறக்கச் செய்யாது,
உன்னை
நினைவில் நிறுத்தும்.
நீ
மனிதன்
மனிதனாய்
இருக்காதே
மனித தன்மை
இழ
ஆக்கிரமி
போதித்தது -
மதம்.
திருட்டு — திருட்டுதான்
திருடுவது
என்றான பின்
யாரிடமிருந்து
எதை, எப்போது, எவ்வளவு
என்பதில் என்ன
பொருள்
இருந்து விடப்
போகிறது.
திருடுவதே
தவறு
எதை, எப்போது, எவ்வளவு
என்ன
மாற்றத்தைப்
தந்து விடப்
போகிறது.