ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்
போகும் வரும் வழியடைத்து
தெருவெங்கும் பந்தல்
தெருவை உடைத்து பாழாக்கி
தெருவடைத்து
வழியடைத்து
காட்டுக் கூச்சலாய்
ஒலி பெருக்கி பாடி
மக்கள்
உயிர் வாழ
கண் காது வாய் முடவைத்து
தனக்கென
அம்மனும்
கண் மூடிக்கொள்ள
சாதி மதமென
சட்டமும்
கண் மூடிக்கொள்ள
ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு...
புதன், 29 ஜூலை, 2026
சத்தமே சாமி
செவ்வாய், 21 ஜூலை, 2026
பூ மாலை உனக்கு!
உன் சிலைக்கு
மாலை அணிவித்திட
கார்கள் கார்களாய்
ஒலி எழுப்பிக் கொண்டே
கூட்டம் கூட்டமாய்
கூப்பாடு போட்டுக் கொண்டே
ஊரே அதிர
வேட்டுகள் வெடித்து
இடையூறு செய்து
அவர்கள்-
அவர்களை
விளம்பரப்படுத்த...
இதற்காகத்தானோ-
நீ
பிறந்தாயோ
காமராசா!
ஞாயிறு, 5 ஜூலை, 2026
கட்டா குஸ்தி 2 - திரைவிமர்சனம்
பனம் பழம் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனை மரத்தில் விளையும், மிகுந்த சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும்.
"காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக" 'கட்டா குஸ்தி 2' படம் முழுவதும் அமைந்திருக்கிறது. அப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே, நமக்குச் சுவையான பனம்பழம் போன்றதொரு நல்ல படம் கிடைத்திருக்கிறதே, அது மகிழ்ச்சி தானே!
நாம் சிரித்துக்கொண்டே ரசிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் இது. அதே சமயம், எவ்வித அலுப்பும் சலிப்பும் தட்டாமல், பல நல்ல கருத்துக்களை மிக அழகாக நமக்குக் சொல்கிறது.
இப்படத்தின் ஆகச்சிறந்த பலமே, குழந்தை நட்சத்திரமாக வரும் சாரா தான். படத்திற்கு அவர்தான் 'பனை மரம்'.
ஒரு சிறந்த ஆசிரியர் கதை சொல்லிப் பாடம் எடுப்பதைப் போல, இத்திரைப்படம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.