பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூலை, 2026

பூ மாலை உனக்கு!

உன் சிலைக்கு
மாலை அணிவித்திட

கார்கள் கார்களாய்
ஒலி எழுப்பிக் கொண்டே
கூட்டம் கூட்டமாய் 
கூப்பாடு போட்டுக் கொண்டே
ஊரே அதிர
வேட்டுகள் வெடித்து

இடையூறு செய்து
அவர்கள்-
அவர்களை
விளம்பரப்படுத்த...

இதற்காகத்தானோ-
நீ 
பிறந்தாயோ
காமராசா!

சனி, 11 ஜூன், 2011

என் இனிய மகள் சசிக்கு‍ பிறந்த நாள் வாழ்த்துகள்

என் இனிய மகளுக்கு‍


நினைத்தது‍ எல்லாம் நினைத்தவுடன் கிடைத்திட


நினைப்பவை எல்லாம் நல்லவையாக நினைத்திட


இனிமையான பொழுதுகள் என்றும் நிலைத்திட


என்றும் குட்‌டிப் பெண்னாய் இருக்கும்


என்றன் சுட்டிப் பெண்ணுக்கு‍


பிறந்த நாள் வாழ்த்துகள்