அரசுப் பேருந்து
மக்களுக்காக
மக்களைச் சுமந்து கொண்டு
டோல்கேட் -
கதவுகள் திறக்கப்படவில்லை
பாஸ்டேக்கில்
பணமில்லையாம்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
நீதிபதிகள்
.........
செல்கிறார்கள்
இலவசமாய்
ஆனால்...
மக்களுக்கான
மக்கள் பேருந்துக்கு
வேண்டுமாம் பணம்
பாதிப்பு? -
மக்களுக்கு மட்டுமே
வாழ்க
மக்களாட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக