Wednesday, November 30, 2011

எதையும் செய்வான் தமிழன்

வழிபாட்டுத் தலங்கள்
நாச ஒலிகளுடன்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
என்ற மூதாட்டியின்
சொல்
பொய்யானதே!

பின்நோக்கி

புதியதாய் போட்ட ரோடு‍
காடு‍ மேடாகியது‍
இக்காலம்
காடு‍ மேடு‍
ரோடாகியது‍
அக்காலம்

Saturday, November 19, 2011

சிதையா நெஞ்சு‍ கொள்

நினைத்தல்
மட்டுமா காதல்?
மறத்தலும்
தான்....!

லௌகிகம் ஆற்று‍

என் அவளே!
உன்னைப் பற்றிக் கவிதை எழுத
முயற்ச்சித்தேன்!
முயற்ச்சித்தேன்!
முயற்ச்சித்தேன்!
……………………
……………………

……………………
அழகிய கவிதை
தொட்டிலில்…!

லீலைஇவ் வுலகு‍

நான் நீயாகி
நீ நானாகி
நான்
எவளின் அவனாகி
நீ
எவனின் அவளாகி
மறந்தது‍
காதல்….!

புதியன விரும்பு

நாள்தோறும்
ஒரு‍ நிலவு
என்னவள் போல்
என்றும் புதியதாய்