வெளியீடு
உயிர்மை பதிப்பகம்,
விலை ரூ 150 பக்கங்கள் 168
அரசியல்வாதிகள்
மற்றும் அவர்களின் அடியாட்கள் வரையிலான பங்கிடுகள், வியாபாரம் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளைகள்,
சுரண்டல்கள் இது தான் கதை.
கதை
சொல்லி இங்கு அடிக்கப் போகும் கொள்ளைக்கு மன்னிக்கவும் வியாபாரத்திற்கு தகுந்த
சூழல் இல்லாததால் அவன் தைமூருக்கு செல்கிறான் வியாபாரத்திற்காக. கொள்ளைக்காக என்றும்
சொல்லிக் கொள்ளலாம்.
கொள்ளையடிக்க
கூட்டணி சேர்ப்பதும், அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நட்புக் கொள்ளுதல், ஏமாற்றுதல்,
ஏமாறுதல், வஞ்சனைகள், குடி, பெண்கள் என அனைத்தும் கதையுனுள் வந்துவிடுகிறது. ஆனாலும்
முதலை என்ற படிமம் கண்களுக்கு வராமல் கதை கதையாகவே மட்டுமே அழகாக செல்கிறது. கடைசியில்
அங்கு ஒன்றும் செயல் படுத்த முடியாத காரணத்தினால் தாய் நாட்டிற்கு திரும்புதல் நடக்கிறது.
அதற்குள் இங்கு அவர்களுக்கு சாதகமான சூழல் மாறிவிடுகிறது. எனவே இங்கு வியாபாரத்தை
இங்கே சிறப்பாக செயல் படுத்தி பணத்தினை கைப்பற்றிக் கொள்கிறார்கள்.
கதை
எவ்விடத்திலும் தொய்வில்லாமல் செல்வதும், கதையினை ஒரு சாகசாமாக சொல்வது தான் நாவலின்
சிறப்பு.
No comments:
Post a Comment