Monday, July 13, 2015

பாபநாசம் - திரைப்பட விமர்சனம்





ஒரு‍ பாபம் நாசம் செய்யப்படுகிறது‍ அதுவும் பாபங்கள் நாசம் செய்யப்படும் பாபநாசம் என்ற ஊரில். அவ்வாறு‍ பாபம் நாசம் செய்யப்பட்டதை எவ்வாறு காவல் துறையிடம் இருந்து‍ மறைக்கப்பட்டது‍ என்பது‍ தான் கதை.
ஓரு‍ சிறிய குடும்பம் அதுவும் தன் குடும்பம் தன் தொழில் என வாழும் சுயம்புலிங்கம். சுயம்புலிங்கம் ஓரு‍ சுயம்பு. அனைத்து‍ வேலைகளையும் தானே கற்று சிறப்பாய் கேபிள் டி.வி. நிறுவனம் நடத்துகிறார். அவரது‍ சினிமா ஆசையும் தொழில் ஆசையாய். எப்போழுதுமே சுயம்புக்கள் தாங்களாகவே கற்றதுக்கு‍ கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம் தான். இங்கு‍ காவல்துறையிடம் சுயம்பு குடும்பம் படும் கொடுமை.
ஒவ்வொரு‍ மனிதர்களிடம் புதையுண்ட ரகசியங்கள் இருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமா.......... ? ஒருவருக்கு‍ மட்டும் தெரிந்தால் தான் ரகசியம் என்பதனை அழகாய் உணர்த்தப்பட்டுள்ளது‍ படத்தில்.
தனி மனிதன் தன் குடும்பம் சிதையாமல் இருக்க எந்த எல்லை வரையினாலும் போவான் என்பதனை கதை சொல்கிறது.
பெற்றார் ஒழுங்காக வளர்க்காத பிள்ளை எது‍ வரை செல்ல ஏதுவாக இன்றைய நவின பொருட்கள் இருக்கிறது‍ என்பதனையும் வளர்ப்பு எவ்வாறு‍ துணை புரிகிறது‍ என்பதனை சிறப்பாய் கதையில் அமைந்துள்ளது‍.
பாடல்கள் வெகு‍ சுமார். வெகு‍ மெதுவாக செல்லும் கதை. படத்தின் முடிவிற்காக மெதுவாக செல்வதை சகித்துக் கொள்ள வேண்டியது‍ உள்ளது. கமலின் பேசுவது‍ பல சமயங்களில் தெளிவில்லாமல் ஒலிக்கிறது.
கமல் கௌதமி மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோரது‍ நடிப்பு வெகு‍ அற்புதம். முகத்தில் பயத்தினை வெகு‍ இயற்கையாய் வெளிப்படுத்தியுள்ளனர்.
 

Saturday, June 27, 2015

எங்கே என் அவள்?



அந்த
கடலின் கறையில்
நின்று‍ கொண்டு‍ இருந்தேன்
அலைகள்
வருவதும் போவதுமாய்
என்
நினைவுகள் போல
நான்
நின்று‍ கொண்டு‍ இருந்தேன்
இப்போது‍
அலைகள் போல் இல்லாமல்
என் நினைவு
நின்றுவிட்டது‍
சூரியன் சென்றுவிட்டான்
இருள் பரவயிது‍
வந்து‍ விட்டாள்
என் காதலி
நிலா
என் நினைவை
அலை போல செய்யாமல்
வந்து‍ விட்டாள்
என்னைப் பார்க்க
நான்
உட்கார்ந்தேன்
அவளின் பார்வை என் மீதே
என் பார்வை அவள் மீதே
அவள்
என்னை மெதுவாக படுக்கவைத்தாள்
அவளை பார்த்துக் கொண்டே
நான்
அவள் சென்று‍ விட்டாள்
அவன் வந்துவிட்டானாம்
ஏ! சூரியனே
நீ எங்காவது‍ போய்விடு‍

Friday, June 26, 2015

இரவிற்கு‍ ஒரு‍ விண்ணப்ம்



இரவே இரவே
எனக்காகப் பாடு‍ தாலாட்டு‍
நான்
இன்றாவது‍ தூங்கவேண்டும்
இரவே இரவே
எனக்காகப் பாடு‍ தாலாட்டு‍
நிலவைப் பார்‌த்து‍
காதலில் தவிக்கும் நான்
தூங்கவேண்டும் இரவே
நீ பாடு‍ எனக்காகத்
தாலாட்டு‍
அவள் நினைவுகள்
மறக்கச் செய்யும்
தாலாட்டு‍ பாடு‍ இரவே
எனக்காக
தூங்கா இரவு வேண்டாம்
இரவே
தூங்கும் இரவாக்க
பாடு‍ தாலாட்டு‍
எனக்காக


Thursday, June 18, 2015

உன் உள் ... உன் உள் ... உன் உள் ...

உன்றன் தூக்கத்தை
ரசிக்க
என் தூக்கம் மறந்தேன்
நீ
தூங்கும் எழிலில்
என்னை மறந்தே
தூங்கிவிட்டேன்
கனவிலும்
நீ தூங்க
நான் என்னை மறந்து‍
தூங்க
………
………
(Inception படத்தின் விளைவு)

Friday, June 12, 2015

நானும் சிவனே



எனது‍ நண்பர் ஒருவர் என்னை தேடி வந்தார். ஓரு‍ போட்டி ஒன்று‍ அறிவிக்கப்பட்டு இருக்கிறதாகவும், அதற்கு‍ எனது‍ உதவி தேவை என்று‍ கூ‍றினார். எப்போது‍ போல சரி என்ன உதவி என்று‍ கேட்க அவருக்கு‍ பதில் நான் எழுதித் தரும்படி கேட்டார். சிவன் தருமியிடம் எழுதிக் கொடுத்து‍ நடந்த திருவிளையாடல் மாதிரி எதுவும் நடக்காதிருக்கட்டும் என்று‍ எழுதிக் கொடுத்தேன்.
அவரும் வாங்கி கொண்டு‍ சமர்ப்பித்தார். திடிரென்று‍ ஒரு‍ நாள் அலைபேசியில் தொடர்பு கொண்டு‍ நீங்கள் எழுதிக் கொடுத்ததை தற்போது‍ விளக்கிக் கூற முடியுமா என்று‍ கேட்டார்? ஏன் எதாவது‍ பரிச்சணையா என்று‍ நான் கேட்டேன். மனதில் சிவன் – தருமி திருவிளையாடல் ஒடியிது‍. அவர் வெகு‍ சாதாராணமாக ஒன்றுமில்லை தேர்வுக் குழுவினர் விளக்கம் கேட்டார்கள், நான் அவர்களிடம் தற்போது‍ அலுவலக வேலையாக இருக்கிறேன். ஒரு‍ அரை மணி நேரத்தில் தொடர்பு கொள்கிறேன் என்று‍ அவர்களிடம் கூறி விட்டேன். தாங்கள் தற்போது‍ விளக்கம் கூறினால், அதை அப்படியே அவர்களிடம் கூ‍றிவிடுவேன் என்று‍ சொன்னார். நான் நல்லவேளை சிவன் மாதிரி நாம் செல்ல வேண்டியதில்லை என மனதில் நினைத்துக் கொண்டு, அவரிடம் விளக்கிக் கூறினேன்.
அன்று‍ இரவு அவர் மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொண்டு‍ நான் எழுதியதையும் கூறிய விளக்கத்தையும் வைத்து‍ போட்டியில் வென்று‍ விட்டதாக கூறினார். நான் மனதில் நல்ல வேளை சிவனுக்கு‍ நேர்ந்த செயல்கள் நமக்கு‍ நடக்கவில்லை என்று‍ மனதில் நினைத்துக் கொண்டு, அவரின் வெற்றிக்கு‍ பாராட்டு‍ தெரிவித்துவிட்டு‍ முடித்தேன் உரையாடலை.
பின் இந்தக் கதையை இன்னொரு‍ நண்பரிடம் பகிர்ந்து‍ கொண்டு‍ எனவே “நானும் சிவனே” என்று‍ கூறினேன். அதற்கு‍ அவர் சக்தியில்லாத நீ “சிவன் இல்லை சவமே” என்று‍ கூறிவிட்டார்.
சிவன் ஆக நினைத்து‍ சவம் ஆன கதையை நினைத்து‍ நொந்து‍ கொண்டேன்.

Monday, May 4, 2015

தாலாட்டு‍

ஆராரிரா ஆராரோ ஆராரோ
என்றன் கண் நீயல்லவா
தூங்கு‍ பெண்ணே கண் மூடி
நான் இருக்கிறேன் உன் அருகே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
என் மடி உனக்காகவே
என் இனிய மணிப் பெண்ணே
உன் இனிய தூக்கதில்
நான் தூங்கிப் போவேனே என் அமுதே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
நிலவுப் பெண்ணே
கவலை மறந்து‍ தூங்கு‍
என் மடி உனக்காகவே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
என் கைகளில்
உன்றன் கன்னம் வைத்து‍
தூங்கு‍ என்றன் இமை பெண்ணே