ஒரு
பாபம் நாசம் செய்யப்படுகிறது அதுவும் பாபங்கள் நாசம் செய்யப்படும் பாபநாசம் என்ற ஊரில்.
அவ்வாறு பாபம் நாசம் செய்யப்பட்டதை எவ்வாறு காவல் துறையிடம் இருந்து மறைக்கப்பட்டது
என்பது தான் கதை.
ஓரு
சிறிய குடும்பம் அதுவும் தன் குடும்பம் தன் தொழில் என வாழும் சுயம்புலிங்கம். சுயம்புலிங்கம்
ஓரு சுயம்பு. அனைத்து வேலைகளையும் தானே கற்று சிறப்பாய் கேபிள் டி.வி. நிறுவனம் நடத்துகிறார்.
அவரது சினிமா ஆசையும் தொழில் ஆசையாய். எப்போழுதுமே சுயம்புக்கள் தாங்களாகவே கற்றதுக்கு
கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம் தான். இங்கு காவல்துறையிடம் சுயம்பு குடும்பம் படும்
கொடுமை.
ஒவ்வொரு
மனிதர்களிடம் புதையுண்ட ரகசியங்கள் இருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமா.......... ? ஒருவருக்கு
மட்டும் தெரிந்தால் தான் ரகசியம் என்பதனை அழகாய் உணர்த்தப்பட்டுள்ளது படத்தில்.
தனி
மனிதன் தன் குடும்பம் சிதையாமல் இருக்க எந்த எல்லை வரையினாலும் போவான் என்பதனை கதை
சொல்கிறது.
பெற்றார்
ஒழுங்காக வளர்க்காத பிள்ளை எது வரை செல்ல ஏதுவாக இன்றைய நவின பொருட்கள் இருக்கிறது
என்பதனையும் வளர்ப்பு எவ்வாறு துணை புரிகிறது என்பதனை சிறப்பாய் கதையில் அமைந்துள்ளது.
பாடல்கள்
வெகு சுமார். வெகு மெதுவாக செல்லும் கதை. படத்தின் முடிவிற்காக மெதுவாக செல்வதை சகித்துக்
கொள்ள வேண்டியது உள்ளது. கமலின் பேசுவது பல சமயங்களில் தெளிவில்லாமல் ஒலிக்கிறது.
கமல்
கௌதமி மகள்களாக வரும் நிவேதா தாமஸ்,
எஸ்தர் அனில் ஆகியோரது நடிப்பு
வெகு அற்புதம். முகத்தில் பயத்தினை வெகு இயற்கையாய் வெளிப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment