வெளியீடு
: மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636
453 மின்னஞ்சல் : manalveedu@gmail.com
விலை ரூ 150
உவர் இதன் பொருள் உப்புத் தன்மை, உப்புச் சுவை, உரைப்பவர் என்பவையாகும். இனிமை என்ற பொருளும் உண்டு. இந்த உப்பின் சுவை உடம்பில் இருக்கும், பேச்சில் இருக்கும், உள்ளத்தில் இருக்கும், நிலத்தில் இருக்கும்.
சோத்துல உப்பு போட்டுத் தானே சாப்பிடுகிறாய் என்று தன்உணர்ச்சியை குறிப்பிட்டுச் சொல்லும் போன்ற சொற் தொடர்களும் உண்டு. இந்த தன்உணர்ச்சி வந்து சிந்தனை எவ்வாறு எல்லாம் சென்று தன்தேவைத் தொலைய இருக்கும் நேரத்தில் சிவனுக்கு முருகன் செய்த ஞானத் தெளிவு போலச் சரியான நேரத்தில் கிடைத்து குறிக்கொள் நோக்கிச் செலுத்துவது "வௌம்" கதை.
English is a funny language. ஆம் ஆனால் அந்த Fun யாருக்கு என்ற விடை தான் கதை. English எப்படி பள்ளியில் சொல்லித் தரப்படுகிறது, மாணவர்கள் அதனை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற Funஐ Punஆக சொல்லும் கதை.
நாய்களை பற்றி 10 பக்கங்களுக்கு கட்டுரை எழுதிய கதை ஆசிரியர், தனக்குத் தெரிந்த அனைத்தையும் கதையில் தேவையே இல்லை என்றாலும் கொண்டு வருவேன் என்பது போல் இல்லாமல் "வளயம்" கதை கதையாகவே இருப்பது உணவில் உப்பு எவ்வளவு இருக்க வேண்டுமோ அவ்வளவே இருப்பது …!
உள்ளம் தன் தவறு என்று நினைத்து உறைந்து இருக்கும் போது வாழ்க்கையின் உண்மை தன் தவறினால் பாதிக்கப்பட்டவர் சொல்லிய சொல் உறைந்து இருத்தலிலிருந்து விடுபடச் செய்தது உப்பை நீர்த்துப் போகச் செய்யும் நீர் போல இருக்கிறது "உறைதல்" கதை.
நம்மை சுற்றிப் பல செயல்கள் நமக்குப் புரியாமலேயே, நமக்குப் தெரியாமலே நடந்து கொண்டே இருக்கும். ஒருவரின் இறப்பு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த வலியினை மற்றும் பழைய ஞாபகங்களை அந்த வலியுடன் போகட்டும் போ என்ற விரக்தியுடன் முன் காலகட்டத்தில் இருந்தவருடன் பகிர்ந்து கொள்வது "உவர்" கதை.
மனித உள்ளம் புரியாத புதிர். அந்த புதிர் புதிராக இருக்கும் போது இருக்கும் பார்வை. அந்த புதிர் அவிழ்ந்த பின் மாறும் பார்வை, அந்த புரிதலிலே உள்ளத்தைத் தொலைத்து விடும் செயல் என உவர்பின் பல தன்மையைக் கதைப்பது "பிரில்லு பாவட".
வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆக வேண்டியது ஆகி விடுகிறது. உப்பு சப்பு இல்லாமல் பல நேரங்களில் காற்று அடிக்கும் பக்கம் போகும் ஆளில்லா ஓடம் போல வாழ்க்கை செல்லும் போது அவ்வப்போது விழும் காட்டுப் பூ போல் கிடைக்கும் மகிழ்ச்சியில் சென்று கொண்டு இருக்கும் போது தீடீர் என்று கிடைத்த ஞானம் வாழ்க்கைக்கு உப்பு சேர்த்து விட்டது போன்றது "விடியல்" கதை.
காலம் – நிகழ் காலம், இறந்த காலம், வருங்காலம் இதில் நிகழ் காலத்தில் பயணிக்கும் போது வருங்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் தாவ முடிகிறது. இந்த ஞாபகங்கள் பயம், குழப்பம் எனப் பலவற்றைத் தருகிறது. முதன் முதலில் சமையல் செய்யும் போது எவ்வளவு உப்புப் போட வேண்டும் என்ற குழப்பத்தை போல. இந்தக் குழப்பத்தின் நடுவே ஒரு பொறி தட்டும். காலம் தான் இதனை உணர்த்தியது போல ஒரு தெளிவு கிடைக்கும். இதனைச் சொல்வது "கெவி".
No comments:
Post a Comment