வெளியீடு : தருண்கவின் பதிப்பகம்,122/44, பூசால கெங்கு தெரு, A3, மகாலெட்சுமி அடுக்ககம், முதல் தளம், ஏழும்பூர் சென்னை - 600 008.
பக்கங்கள் : 96
விலை ரூ 80
கவிஞர் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதிய கவிதைகளைக் கால வரிசையின்றி தொகுத்துள்ளது பக்கங்கள் மாறிய நினைவுத் தாள்களாய் உள்ளது.
கவிதை தலைப்புக்கும் பாடும் பொருளுக்கும் முரண்கள், கவிதைகளில் சிலவற்றில் ஒலி நயத்திற்காக வலிந்து திணிக்கப்பட்ட சொற்கள் ஆனாலும் எவற்றிலும் கவித்துவம் விட்டு விலகாமல் இருப்பது சிறப்பு.
பெண்மையை மென்மையாய் கவிதைகளில் கொண்டு வந்துள்ளார். உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் மிகச் சிறப்பாய் அமைந்துள்ளன.அந்த உணர்வுகள் கவிஞரின் நேரடி வாழ்க்கை அனுபவங்களாக மட்டுமே தெரிகிறது. அங்கால்யிப்புகளை, நக்கல்களை கதை கவிதையாய் தந்து இருப்பது ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.
இன்றைய காலகட்டங்களில் வெளி வந்துள்ள கவிதை நூல்களில் கவிதைகள் கவிதையாய் இருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய புத்தகங்களில் இந்த இந்தப் புத்தகமும் அடங்கும். இப் புத்தகத்தை வாசிக்கும் போது கவிதை அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.
No comments:
Post a Comment