புதன், 14 நவம்பர், 2018

அனைத்தும் அறிந்தவன்

குழந்தையின் அழுகை
தாயுக்கு‍ப் புரிந்தது‍

காதலியின் கண்ணசைவு
காதலனுக்குப் புரிந்தது‍

தந்தையின் கோபம்
மகனுக்கு‍ புரிந்தது‍

மொழி தெரியா சைகையில்
தேவைகள் புரிந்தது‍

அனைந்தும் படைத்தவனாம் கடவு ள்
அவனுக்கு‍
ஒரு‍ மொழி தான்
தெரியுமாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக