Tuesday, December 31, 2019

இன்று‍ நினைவுக்கு‍ வந்த பாரதியின் பாடல்

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.

Tuesday, July 2, 2019

சரவணன் சந்திரன் எழுதிய ஐந்து முதலைகளின் கதை


வெளியீடு‍ உயிர்மை பதிப்பகம், 
விலை ரூ 150 பக்கங்கள் 168


அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள் வரையிலான பங்கிடுகள்,   வியாபாரம் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளைகள், சுரண்டல்கள் இது‍ தான் கதை.
கதை சொல்லி‍ இங்கு‍ அடிக்கப் போகும் கொள்ளைக்கு‍ மன்னிக்கவும் வியாபாரத்திற்கு‍ தகுந்த சூழல் இல்லாததால் அவன் தைமூருக்கு‍ செல்கிறான் வியாபாரத்திற்காக. கொள்ளைக்காக என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
கொள்ளையடிக்க கூட்டணி சேர்ப்பதும், அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நட்புக் கொள்ளுதல், ஏமாற்று‍தல், ஏமாறுதல், வஞ்சனைகள், குடி, பெண்கள் என அனைத்தும் கதையுனுள் வந்துவிடுகிறது. ஆனாலும் முதலை என்ற படிமம் கண்களுக்கு‍ வராமல் கதை கதையாகவே மட்டுமே அழகாக செல்கிறது. கடைசியில் அங்கு‍ ஒன்றும் செயல் படுத்த முடியாத காரணத்தினால் தாய் நாட்டிற்கு‍ திரும்புதல் நடக்கிறது. அதற்குள் இங்கு‍‍ அவர்களுக்கு‍ சாதகமான சூழல் மாறிவிடுகிறது‍. எனவே இங்கு‍ வியாபாரத்தை இங்கே சிறப்பாக செயல் படுத்தி பணத்தினை கைப்பற்றிக் கொள்கிறார்கள்.
கதை எவ்விடத்திலும் தொய்வில்லாமல் செல்வதும், கதையினை ஒரு‍ சாகசாமாக சொல்வது‍ தான் நாவலின் சிறப்பு.

ஷ்ரவண் எழுதிய சிறகடிக்கும் சிந்தனைகள்




விலை ரூ 50
வெளியீடு‍ : கீதம் பதிப்பகம், K-702, பூர்வா ஸ்வான்லேக், OMR கேளம்பாக்கம், சென்னை 600003
அருமையான உவமைகள், மென்மையான வார்த்தைகள், கற்பனை மற்றும் இடித்துரைக்கும் வார்த்தைகள் கொண்டு கவிதைகள் இயற்கையாய் வெளிப்படுகின்றன. ஏக்கம், காதல், காதல் தோல்வி, நட்பு, வேதனை, எள்ளல் போன்ற அருமையான உணர்வுகளின் பதிவுகளாய் கவிதைகள் அமைந்துள்ளன. சில கவிதைகள் மயக்கத்தின் வெளிப்பாடாய், காதல் போதையின் உச்சக்கட்டமாய் வெளிவந்துள்ளன. பெண் ஆதிக்கத்தை எதிர்த்தும் சுதந்திரமான சிந்தனைகளுடன் வீரியமான கவிதைகள் உள்ளன. கவிதைகள் புகைப்படமாய் மாறும் அதிசயம் கவிதைகளில் மறைந்து உள்ளன. ஒவ்வொரு கவிதைகளிலும் வார்த்தைகள் அழகாய் உணர்வாய் அமைந்து உள்ளன. வார்த்தை பொறுக்கி என்ற பட்டம் கவிஞருக்குக் கொடுக்கலாம்.

Sunday, June 2, 2019

காட்சிப் பிழைகள்!

கண்கள் காணும்
காட்சிகள்
பகுதி பகுதிகளாய்

மனம் வகைப்படுத்துகிறது
ஒரு விதமாய்

இப்படி ஒன்றே
பலவிதமாய்

பின்
பலவிதங்கள்...!

Saturday, June 1, 2019

நான் எப்படி!

கவிதை எழுதினேன்
கவிஞனாகவில்லை

கதை எழுதினேன்
கதாசிரியானகவில்லை

நடித்தேன்
நடிகனாகவில்லை

பேசினேன்
பேச்சாளானகவில்லை

பாடினேன்
பாடகனாகவில்லை

பின்
மனிதானாக பிறந்த
நான்
மனிதனாக...!

நினைவுகள்!

இல்லாத ஒன்று
இருப்பதாய் நினைத்து
இருப்பதை இல்லாதாக்கும்
நினைவுகள்!

நம் காதல்

நான் நினைக்கும்
நீயாய்
என் மனதுள்

நீ நினைக்கும்
நானாய்
உன் மனதுள்

நான்
நானாக

நீ
நீயாக

பின் எப்படி
செம்புல நீராய்

Saturday, May 11, 2019

நாக்கை நீட்டு‍ - புத்தக விமர்சனம்

நாக்கை நீட்டு
சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்

ஆசிரியர் : மா ஜியான்
பதிப்பாளர்: அடையாளம்
பக்கங்கள் : 96
மொழிபெயர்ப்பாளர் : எதிராஜ் அகிலன்
ISBN: 9788177203035
வெளியிட்ட ஆண்டு : 2019
 
யதார்த்தம், புனைவு என இரு உலகத்திலும் மாறி மாறி கதைகள் பயணிக்கிறது. கதைகளின் உள்ளே பெண்ணை அழித்துவிட நினைக்கும் ஒவ்வொரு செயலிலும் ஆண் ஏமாறுவதும், மற்றொரு நாட்டை ஆதிக்கம் செலுத்துவது இரு நாடுகளுக்குமே கேடாக முடியும் என்பன பொதிந்து உள்ளன. கதைகளில் உள்ளே பொதிந்து வைத்திருக்கும் ஒவ்வொன்றையும் நாம் தெரிந்துகொள்ளும் பொழுது கதை மேலும் ஆழமாகச் செல்கிறது.

நாட்டை அடி‍மைப்படுத்துவதில், பெண்ணை அடிமைப்படுத்துவதில், பண்பாட்டை அழிப்பதில் விளையும் பேராபத்துகள் உருவகக் கதைகளாகவே சொல்லப்பட்டு இருக்கின்றன.‍ ஒரே சிந்தனையுடன் கதையில் இயைந்தால் மட்டுமே கதைகள் நம் மனதில் ஆட்படும். இல்லையென்றால் கதையுடனான நம் பயணம் தடைப்பட்டு விடும்.

ஒவ்வொரு கதையிலும் தன் தாய்நாட்டை விட்டு விலகி நிற்கும் அகதிகளின் வாழ்வினை, தங்கள் நாட்டிலேயே தங்களது‍ சுதந்திரத்தை இழந்து நிற்கும் சுதந்திர அடிமைகளை அப்படியே பெண்ணுடன் பொருத்தி எது புனைவு எது உண்மை என்பதனை அறிந்துகொள்ள அறிவினை துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறோம்.

ஒவ்வொரு கதையும் ஒரு குற்ற உணர்ச்சி அந்தக் குற்ற உணர்ச்சி பாலியல் காரணமான உண்டான குற்ற உணர்ச்சியாகவும், அதிலிருந்து விடுபட அல்லது மறைத்துவிட எடுக்கும் முயற்சியாகவும் சொல்லப்படுகிறது. முறை தவறிய பாலியல் உறவு தாய் நாட்டின் மீது கொண்ட ஏக்கமாகவும், தன் நாட்டை காப்பாற்ற முடியாத சுயபச்சதாபமாகவும், தன் நாட்டை தானே காட்டிக்கொடுத்த குற்ற உணர்ச்சியாகவும் வெளிப்படுகிறது.

நாடு, பெண், முறை தவறிய பாலியல் உறவு என எந்த உண்மைச் சம்பவங்களையும் இந்த கதையுடன் ஒட்டி வைத்துக்கொள்ள முடியும். தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் உருவங்களாகவே இருக்கிறது. எனவே பொருத்துதல் எளிதாகவே அமைந்து விடுகிறது.

தன் தாயுடன் உறவு கொண்டு ஒரு பெண்ணைப் பெற்றெடுத்து அந்தப் பெண்ணுடனும் உறவு கொள்கிறார். அந்தப் பெண் தன் அப்பா இவர் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அவளிடம் நீ என் அம்மாவின் பெண் என்று சொல்கிறார் அதனால் அவளுக்கு ஏற்படும் குழப்பங்கள். இவை தன் நாட்டை ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் பண்பாட்டு இழப்பையும் இங்கே முறை தவறிய பாலியில் உறவின் மூலமாக கதையைச் சொல்கிறார்.

புத்த மதத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும், அதை தங்களது பண்பாட்டிலிருந்து விலக்கி வைக்க எடுக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சிகளையும் ஒவ்வொரு முறையில் தங்களது தாய் நாட்டிலேயே தாங்கள் சுதந்திரத்தை இழந்து இருப்பதை அழகாய் வெளிப்படுத்துகிறார்.

ஒரு ராணுவ வீரன் தன் உடை மட்டும் இல்லை என்றால் அவளது இரு கணவர்களையும் கொன்று விடுவேன் என்று சொல்வது அநியாயத்திற்கு எதிராகக் கு‍ரல் கொடுக்க முடியாமல் இருந்து விட்டு அதற்கு ஒரு காரணம் தேடும் செயலாக நம் கண் முன்னே நிறுத்தப்படுகிறது.

கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்றவனுக்கு நகரப் பண்பாட்டின் மீது உள்ள காதல். உடை விஷயத்தில் உள்ள மாறுதல்களை தான் உண்மையான வளர்ச்சி என்று நம்பும் எண்ணமும். பாலியல் ஆசைகள் நிறைவேற எளிதாய் அமையும் அனைத்தும் வளர்ச்சி என நம்பும் மனித வாழ்வின் உண்மையான முகம் பட்ட வெளிச்சமாக்கப்படுகிறது.

ஒவ்வொரு கதையிலும் திபெத் நாட்டின் இயற்கை எழிலின் வர்ணனைகளும் விவரணைகளும் வெகு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

புத்தகம் தடை செய்பட்டத்திற்குக் காரணம் கதைகளில் ஔிந்துள்ள உருவகங்கள் தானே தவிர அதில் வரும் பாலியல் சம்பவங்களோ அல்லது திபெத் மக்களைக் குறையாகச் சொல்லப்பட்டவையோ அல்ல. இக் கதைகளை நம் நாட்டில் தற்போதைய‍ நிகழ்வுகளுடன் இணைத்தும் பார்க்க முடியும்.

கதையின் பின்னுரையில் ஆசிரியர் சொல்லும் ஒரு சீன பழமொழி அனைத்து விதமான அடி‍மைத்தன முயற்சிகளும் இழப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பது திபெத் சீனா நாட்டிற்கு மட்டுமல்ல எல்லா நாட்டிற்கும் பொருந்துவது. இவற்றிக்கு மட்டுமல்ல அதிக்கம் செலுத்த நினைக்கும் ஒவ்வொரு செயலுக்குமே பொருந்தும்.

எது இணைந்திருக்கிறதோ, அது கடைசியில் சிதறுண்டும் போகும்;
எது சிதறுண்டி‍ருக்கிறதோ, அது இறுதியில் ஒன்றினையும்.


‘ஆதிக்கம் செலுத்துதல்’ என்று நம் மனதில் இருந்து என்று விலகிறதோ அன்று தான் புத்தர் உயிரோடு வருவார்.