செவ்வாய், 23 ஜூன், 2026

மதக் கொலைகள்

கோயில்கள்
சர்ச்சுகள்
பள்ளிவாசல்கள்
ஒலிகள்

அதிகாலையில் இருந்து
இரவு வரை

ஒலி
உற்பத்தி நிலையங்களாய்

சட்டத்தின் எல்லைகளை
மீறியே
எப்போதும்

சட்டம் 
எங்களை 
என்ன செய்யும்
என்ற மிதப்பில்

நாள்தோறும்
சிறுகச் சிறுக
என்னைக் கொல்லும்

என் சாவை 
விரைவுபடுத்தும்
வழிபாட்டு இரைச்சல்கள்

சாவை நோக்கி
நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக