நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் அல்லது உங்கள் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் உங்கள் காதுகளுக்குள் வந்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், உங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியுமா அல்லது வேலைதான் செய்ய முடியுமா? நீங்கள் அவர்களை என்ன செய்வீர்கள்? விரட்டியடித்து விடுவீர்கள் அல்லவா?
ஆனால், நம் நாட்டில் அது முடியாது. ஏனென்றால், அந்த காதில் வந்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது கோவில்களில் 'இறைவனுக்காகஓதும் மந்திரங்கள்' என்று சொல்லிக்கொண்டு, ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே நம் காதுகளையும் புண்ணாக்கி, நம் மனதையும் புண்ணாக்கி, நம்மையும் புண்ணாக்கி, நம்மைச் சீக்கிரமே சாகடிக்கச் செய்யும் கோவில்கள்
இதை எதிர்த்து நாம் சட்டத்தை நாடினோம் என்றால், சட்டமும் மௌனமாகிவிடுகிறது. அதிலும் கொடுமை என்னவென்றால், சட்டப்படி இந்தக் கோயில்கள் செய்வது எதுவுமே சட்டத்திற்கு உட்பட்டதல்ல; ஒலிக்கும் டெசிபல் அளவுகளும் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. ஆனாலும் சட்டமும் அவர்கள் பக்கம்! நம்மால் எதிர்த்தும் அவர்களிடம் பேச முடிவதில்லை; ஏனென்றால், கோயில்களை நடத்துபவர்கள் ரௌடிகளாகத்தான் இருக்கிறார்கள்.
நம் வாழ்வு சாவை நோக்கித்தான்; ஆனால், அந்தச் சாவை இந்தக் கோயில்கள் விரைவாக்கிக்கொண்டே இருக்கின்றன. வாழ்வதற்காகக் கட்டப்பட்ட கோவில்கள், சாக வைப்பதைத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றன.
திங்கள், 31 ஆகஸ்ட், 2026
கோவில் ஒலிபெருக்கிகள்: பக்தியா? பொதுமக்களுக்கு இடையூறா?
லேபிள்கள்:
ஒலி மாசு,
Civic Rights India,
Noise Pollution,
Social Awareness
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக