Wednesday, November 14, 2018

நான் யார்! நானா?

நான்
என் எச்சங்கள்
அல்ல!

என் எச்சங்கள்
கொண்டு‍
என்னை அறியாதீர்கள்!

என் எச்சங்கள்
கொண்டு‍
என்னைகண்காணிக்காதீர்கள்

எச்சங்கள்
நான் விட்டுச் செல்பவையே

ஆனால்
நான் அல்ல
என் எச்சங்கள் !

பொழுது‍ போகவில்லை!

பொழுது‍ போகவில்லை
ஆனாலும்
ஒவ்வொரு‍ நொடியும்
நகரத் தான் செய்கிறது‍
பொழுது‍ போகவில்லை
ஆனாலும்
நொடிகள் நகர
நிமிடங்கள்
நிமிடங்கள் நகர
மணிகள்
மணிகள் நகர
நாட்கள்
நாட்கள் நகர
ஆண்டுகள்
என அனைத்தும்
நகரத்தான் செய்கிறது‍
ஆனாலும்
பொழுது‍ போகவில்லை!

#நானும்

ஒன்றும் ஒன்றும்
எப்போதும் இரண்டல்ல!

எப்போதும் இரண்டல்ல
என்பதால்
ஒன்றும் ஒன்றும்
இரண்டு‍
என்பதும் பொய்யல்ல!

பொய்யில்லை என்பதால்
உண்மையும் அதுவல்ல

உண்மையும் அதுவல்ல
என்பதால்
அது‍ பொய்யும்மில்லை

  ஒன்றும் ஒன்றும்
 ..................

இக்கணத்தில் வாழ்தல்

இக்கணத்தில் வாழவே
ஆசைப்படுகிறேன்!

தற்போதைய பசி
நேற்றைய
பசியின் கொடுமையை
ஞாபகப்படுத்துகிறது‍!
நாளைய
பசியின் கொடுமையை
ஞாபகப்படுத்துகிறது‍!
ஆனாலும்
இன்றைய பசியின்
வலியுடன்
இக்கணத்தில் வாழவே
ஆசைப்படுகிறேன்!


வாழ்க்கை முரண்

சிறு‍ குழந்தைகளை
பார்க்கும்
ஓவ்வொரு‍ முறையும்

சிறு‍ வயதில்
உயரம் அளக்க
கோடுகளிட்டு‍
கோடுகள் உயரும் தருணம்
தந்த மகிழ்ச்சி

வளர்ந்த பின்
ஏங்க வைக்கிறது‍
வளராமலே இருந்திருக்கிலாம்
குழந்தையாய்!

தற்கொலை

ஒவ்வொரு‍ முறையும்
உன்னை அடைய
முயற்சித்து‍

ஒவ்வொரு‍ முறையும்
தோல்வி அடைந்து‍ ....

வாழ்கிறேன்!

 

அரசு‍

கோவணத்தையும் பறித்துவிட்டு‍
நிர்வாணத்திற்கு‍
விதித்தது‍ வரி!