Showing posts with label கிரா. Show all posts
Showing posts with label கிரா. Show all posts

Tuesday, May 11, 2021

கி. ராஜநாராயணன் எழுதிய மிச்சக் கதைகள்

 

கதைகளில் ஏது‍ மிச்சம். கதைகள் எப்போதும் இருந்து‍ கொண்டு‍ தானே இருக்கும். அது‍ என்ன மிச்சக் கதைகள் என்ற ஐயத்துடன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் கி.ரா. பக்கங்களில் நிறைந்து‍ இருக்கிறார். நிறைந்து‍ இருப்பது‍ கி.ரா.வின் எழுத்து‍ அல்ல. பக்கங்களில் நிறைந்து‍ இருப்பது‍ கிராவின் புகைப்படங்கள் வித விதமாய். கி.ரா. என்ற பெயரை துணை கொண்டு‍ புதுவை இளவேனில் தன் புகைப்படத் திறமையைக் காட்டிக் கொண்டு‍ இருக்கிறார். புதுவை இளவேனிலுக்கு‍ தன் புகைப்பட திறமையைக் காட்ட வேண்‌டும் என்றால் புகைப்பட சமந்தமாக அவரே புத்தகம் போட்டுக் கொள்ள வேண்டும், அதனை விடுத்து‍ கிராவின் எழுத்துக்குள் ஒட்டி‍ உறவாடி‍‍ தன்னை காட்டிக் கொள்ளுதல் வாசகனை வஞ்சிப்பதாகும்.

ஒரு‍ புத்தகம் அதன் குறிக்கோளை விட்டு‍ விலகாமல் இருக்க வேண்டும். ஆனால் இந்த புத்தகத்தில் வரும் படங்கள் கதைக்குத்‍ துணை புரியும் படங்களாக இல்லை. அவைகள் வேறு‍ குறிக்கோளை நிறைவேற்ற இட்டுக் கட்டப்பட்ட படங்களாய் மட்டுமே தெரிகிறது. தனி மனித வழிபாடு‍, கா(சு)ற்று உள்ள போதே தூற்றிக் கொள் என்பன‍ தான் குறிக்கோளாக இருக்க முடியும்.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்

ஆனால் இங்கு‍ புல், ஒட்டுண்ணி(Parasite) போல் நெல்லுக்குச்‍ சிறிதும் இடம் கொடுக்காமல் முழுவதையும் எடுத்துக் கொண்டு‍ உள்ளது.

ஆக மெத்தத்தில் கி.ரா. என்ற brand விலை போகிறது.

விலை ரூ 300

104 பக்கங்கள்

வெளியீடு‍ : அன்னம், மனை எண்‌ 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007.