அழகன் Azhagan
Wednesday, November 14, 2018
தற்கொலை
ஒவ்வொரு முறையும்
உன்னை அடைய
முயற்சித்து
ஒவ்வொரு முறையும்
தோல்வி அடைந்து ....
வாழ்கிறேன்!
அரசு
கோவணத்தையும் பறித்துவிட்டு
நிர்வாணத்திற்கு
விதித்தது வரி!
தன் அடையாளம் தேடுதல்
அவளும்
அவள் பெயர்
சொன்னதில்லை!
நானும்
அவள் பெயர்
கேட்டதில்லை!
நானும்
என் பெயர்
சொன்னதில்லை!
அவளும்
என் பெயர்
கேட்டதில்லை!
இருவரும்
ஓர் அறையில்
பழகினோம்...!
பழகிறோம்..!
பழகுவோம்..!
பெயர் தெரியும் வரை!
விடாது கருப்பு
என்னை ஏன்
பின் தொடர்கிறாய்
உன் கேமிரா கண்களால்?
நான் உன்றன் காதல் அல்ல!
என் தகவல் கொண்டு
ஏன்னை ஏன் ஆராய்கிறாய்
நான் என்னை உனக்குத் தரவும் இல்லை!
பேசாதே!
கேட்காதே!
கேளாதே!
என்கிறாய்
நான் குரங்கும் அல்ல
இப்படி இவ்வாறு மட்டுமே
செய் என்கிறாய்
நான் உன் அடிமை அல்ல
பின் நான்?
ஞாபகம் வந்துவிட்டது
நான்
இந்நாட்டின்
சுதந்திர குடிமகன்!
அனைத்தும் அறிந்தவன்
குழந்தையின் அழுகை
தாயுக்குப் புரிந்தது
காதலியின் கண்ணசைவு
காதலனுக்குப் புரிந்தது
தந்தையின் கோபம்
மகனுக்கு புரிந்தது
மொழி தெரியா சைகையில்
தேவைகள் புரிந்தது
அனைந்தும் படைத்தவனாம் கடவு ள்
அவனுக்கு
ஒரு மொழி தான்
தெரியுமாம்!
இரவல்
வீட்டினுள் நான்
நிலவோளியில்!
ஞானம்
புத்தனுக்கு போதி மரம்
எனக்கு மா மரம்
அடித்த காற்றில்
கிடைத்தன மாங்காய்கள்
எனக்கு ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)