உன்னை அறிய முயல்கிறேன்.
என்னை அறிகிறேன்.
மாற்றம் பெறுகிறேன்.
மீண்டும் -
உன்னை அறிய முயல்கிறேன்...
என்னை அறிகிறேன்.
மாற்றம் பெறுகிறேன்.
உன்னை அறிதலில்
என்னை அறிகிறேனா?
அல்லது
என்னை அறிந்ததால்
மாற்றம் பெறுகிறேனா!
Saturday, February 28, 2026
உன்னிலிருந்து என்னை அறிதல்
Thursday, February 26, 2026
எக்காலத்திற்கும் அப்பால் நீ
கடந்த காலம்
கடந்தபோனது
எனப் புரிய வைத்தாய்
போனதை
பிடிக்க முடியாது
என உணர வைத்தாய்
வருங்காலம்
உறுதி அற்றது
என காண வைத்தாய்
வருவது
அறிந்துகொள்ள முடியாது
என உள்வாங்க வைத்தாய்
நிகழ் காலம்
இன்னும் முற்றாதது
எனத் தெளிய வைத்தாய்
நிகழ்வது
ஒன்றே நாம் நடத்துவது
என தெரிய வைத்தாய்
எக்காலமும் நீயேன இருக்கும்
என்னை
இக்காலத்தில் இருக்க வைத்தாய்
Wednesday, February 25, 2026
அவள் உணர்த்திய காதல்
காதலை
காதலாக தர
பழக்கியவள்
நீ!
காதலை
காதலாக பெற
பழக்கியவள்
நீ!
தருவதும் இன்பம்
பெறுவதும் இன்பம்
என உணர்த்தியவள்
நீ!
பிரிவிலும் நீயே
என் வேலை
உன் வேலை
வேலை நிமித்தம்
பிரிவு
எனக்கும் உனக்குமாய்
என உணரவைத்தவள்
நீ
பிரிவுத் துயரம்
கொள்ளுதல்
பொருள் அற்றது
எனப் புரியவைத்தவள்
நீ
நீயே
உண்மை
நீயே
காதல்
மென்மையில் மறைந்த உண்மை
பூக்களே
இயல்பிலே நீங்கள்
மென்மையாய்!
பூக்களே
உங்களை அறிய
உங்களுள் தேடாதீர்கள்!
பூக்களே
உங்களை அறிய
அறியுங்கள் என்னவளை
Tuesday, February 24, 2026
எத்திசையிலும் தென்றல்
காற்று
தெற்கிலிருந்து வீசினால்
தென்றல்
காற்று
வடக்கிலிருந்து வீசினால்
வாடை
காற்று
கிழக்கிலிருந்து வீசினால்
கொண்டல்
காற்று
மேற்கிலிருந்து வீசினால்
கச்சான்
ஆனால்
நீ
எப்பக்கமிருந்து வந்தாலும்
தென்றல்
இயல்பே நீ
புதுமைப் பெண்
என்றால்
கோபம் கொள்கிறாய்
என் இயல்பு
நான்
என்கிறாய்
அடைமொழிகள்
ஏன் என்கிறாய்?
இயல்பே
சிறப்பு என்கிறாய்!
நீ நீயே
எப்போதும்.
நீயாகவே நீ
உன்னை சூரியன் என்கிறேன்
நீ
நீயாகவே இருக்கிறாய்
உன்னை நிலா என்கிறேன்
நீ
நீயாகவே இருக்கிறாய்
உன்னை மேகம் என்கிறேன்
நீ
நீயாகவே இருக்கிறாய்
உன்னை மலை என்கிறேன்
நீ
நீயாகவே இருக்கிறாய்
உன்னை நதி என்கிறேன்
நீ
நீயாகவே இருக்கிறாய்
உன்னை காதல் என்கிறேன்
நீ
நீயாகவே இருக்கிறாய்
நான் எதைச் சொன்னாலும்
நீ
நீயாகவே இருக்கிறாய்
நீ எழுதும் எழுத்து நான்
காதல் என்றால்
நீ
எழுதிய கவிதை
நான்
நீ
கவிதை என்றால்
நீ
உருவாக்கிய காதல்
நான்
நீ
காதல் என்றாலும்
நீ
கவிதை என்றாலும்
என்றென்றும் உனக்காக
நான்
உயிர் மெய் காதல்
என்னுள் நீ
என் மொழி போல்
என்றும்
இளமையாய்
என்னுள் நீ
என் மொழி போல்
என்
அடையாளமாய்
என்னுள் நீ
என் மொழி போல்
என்
உயிராய்
என்னுள் நீ
என்னை
மெய்யாக்கினாய்
நாம்
உயிர் மெய்யாய்
எப்போது ...
Friday, February 20, 2026
காதலாய் நீ
உன்னைப் பார்த்தால்
காதல்
மலர்கிறது
உன்னை நினைத்தால்
காதல்
மலர்கிறது
நீ வருகிறாய்
காதல்
மலர்கிறது
நீ போகிறாய்
காதல்
மலர்கிறது
நீயே
காதலா!
காதல் தான்
நீயா!
Tuesday, February 17, 2026
வியப்பாய் நீ!
ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்க்கையில்
நீ
வியக்க வைக்கிறாய்
ஒவ்வொரு முறையும்
உன்னை அறிகையில்
நீ
வியக்க வைக்கிறாய்
ஒவ்வொரு முறையும்
உன்னை உணர்கையில்
நீ
வியக்க வைக்கிறாய்
ஒவ்வொரு முறையும்
என் வியப்பிலும்
நீ
வியக்க வைக்கிறாய்
என்னை நானாக்கிய நீ
நீ பார்க்கும் என்னை
பார்க்க வைத்தாய்
நான் பார்க்கும் என்னை
நானாக ஆக்கினாய்
என்னை நீயாக்காமல் என்னை
நானாக மாற்றினாய்
Monday, February 16, 2026
Sunday, February 15, 2026
கவிதையை கடந்த காதல்
நான்
உன்னைப் பார்க்கையிலும்
நீ
என்னைப் பார்க்கிறாய்!
நான்
உன்னைப் பார்க்காமலிருக்கையிலும்
நீ
என்னைப் பார்க்கிறாய்!
ஆனால்
செயலற்று நான்
உன் நினைவுகளுடன்
நீயோ
அனைத்தும் உள்ளடக்கி
உன் செயலுகளுடன் .
கவிதையை விட
காதல்
பெரிது தான்!
Saturday, February 14, 2026
நிழலின் பொருள்
காலைப் பொழுது ஆனாலும்
மாலைப் பொழுது ஆனாலும்
பகல் பொழுது ஆனாலும்
இரவுப் பொழுது ஆனாலும்
கிழக்கிலிருந்து மேற்கே ஆனாலும் மேற்கிலிருந்து கிழக்கே ஆனாலும்
தெற்கிலிருந்து வடக்கே ஆனாலும்
வடக்கிலிருந்து தெற்கே ஆனாலும்
என் நிழல்
உன் முன்னும்
செல்வதில்லை
உன் பின்னும்
செல்வதில்லை
நிழல் கூட
எப்பொழுதும்
உன்னிடத்திலே
நிலவுக்காக சூரியன்
நீ நிலவு!
நான் சூரியன்!
நான் தரும் ஒளியில்
மிளர்பவள் அல்ல நீ!
உனக்கு ஒளி தரவே
படைக்கப்பட்டவன் நான்!
மிளர்பவள் நீ!
ஒளி தருபவன் நான்!
காதல் செதுக்கிய கவிதை
என்னை செதுக்கினாய்!
அதனால் நீ
வல்லியவளா?
இல்லை ...
வலிக்காமல்
என்னை செதுக்கினாய்!
அதனால் நீ
மெல்லியவளா?
என்னை மாற்றினாய்!
அதனால் நீ
வல்லியவளா?
இல்லை ...
பழிக்காமல்
என்னை மாற்றினாய்!
அதனால் நீ
மெல்லியவளா?
நீ
காதல்
அவ்வளவே!
Thursday, February 12, 2026
உன் பெயர் கவிதை
கண் காண்பது
உன்னை
கேட்கும் ஒலி
உன் பெயர்
என் மூச்சு
உன் பெயர்
என் உணர்வு
உன் பெயர்
என் உலகம்
உன் மனம் மட்டுமே
Wednesday, February 11, 2026
நீ நான் கவிதை
நீ
சூரியன் என்றால்
நான்
நிலவு
நீ
காற்று என்றால்
நான்
தூசி
நீ
ஆறு என்றால்
நான்
ஆளில்லா ஓடம்
நீ
நிலம் என்றால்
நான்
மரம்
நீ
வானம் என்றால்
நான்
பூமி
கவிதை எழுதிய காதல்
காதலை உருவாக்கிய
நீ
கவிதை
காதலால் நான்
எழுதியது
கவிதை
எந்தக்
கவிதை
நீ?
காதலாய்
நான்
கவிதையாய்
நீ
எப்போழுதும்
காதல் கவிதையாய்
நாம்
நீயும் நானும் – ஒரே கவிதை
இருக்கும் என்னை
நீ அறிய
என்னுள் செல்கிறாய்
ஆனால்
நான் மீண்டும்
உன் உள் செல்கிறேன்.
நீயும்
விடாமல்
என் உள் செல்கிறாய்
வெல்வது
யார்?
வெல்லுதல்
வேண்டுமோ?
என் உள்
நீயோ
உன் உள்
நானோ
அப்படியே இருந்துவிட்டு
போவோமே!
என் கவிதை யாகும் நீ
என்னை நானாக்க பார்க்க
முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும்
தோல்வியையே தழுவுகிறாய் நீ!
உன் தோல்விகள்
எனக்கு மன வருத்தம் தந்தாலும்
உன்னுள் இருந்து
வெளி வராமலே
நான்!
நான் நானாக
இருப்பதல்ல
என் மகிழ்ச்சி.
உன் உள்
இருப்பதே
என் மகிழ்ச்சி
யாரின் கனவு, யாரின் கவிதை?
நான் காணும்
கனவு
நீ!
என் கனவின்
நாயகி
நீ!
என் கனவு
முழுவதும்
நீ
கனவில்
விழித்திருக்கிறேனா!
விழிப்பில்
கனா காணுகிறேனா!!
உன்னுள் இருக்கும்
நான் காணும்
கனவு
என் கனவா?
உன் கனவா?
நீயாகும் கவிதை
நான் பறக்கும்
வானம்
நீ!
நான் நனையும்
கடல்
நீ!
நான் உணரும்
காற்று
நீ!
நான் இருக்கும்
நிலம்
நீ!
நான் பார்க்கும்
ஒளி
நீ!
நான் காணும்
நீ...?
Tuesday, February 10, 2026
முற்றுப்புள்ளியில்லாத கவிதை
என்னுள்
மாற்றத்தை ஏற்படுத்தியவள்
நீ!
என்னை
செதுக்கியவள்
நீ!
என்னை
நானாக ஆக்கியவள்
நீ!
ஆனால் ...
கண்ணாடியில் நான்
நீயாக... !!!
முடிவில்லா கவிதை
என் கவிதைகளுக்கு
எழுத்தாய் இருக்கிறாய்
பொருளாய் இருக்கிறாய்
உயிராய் இருக்கிறாய்
என்னை உன்னுள்
அடைத்தவள் நீ!
ஆனாலும் ...
என் கவிதைகள்
ஏன் தொடர்கின்றன?
யாரை அறிய?
என்னையவா?
உன்னையவா?
இப்படிக்கு
காதலை காதலித்தவன்.