வியாழன், 26 பிப்ரவரி, 2026

எக்காலத்திற்கும் அப்பால் நீ

கடந்த காலம்
கடந்தபோனது
எனப் புரிய வைத்தாய்

போனதை
பிடிக்க முடியாது
என உணர வைத்தாய்

வருங்காலம் 
உறுதி அற்றது
என காண வைத்தாய்

வருவது
அறிந்துகொள்ள முடியாது
என உள்வாங்க வைத்தாய்

நிகழ் காலம்
இன்னும் முற்றாதது
எனத் தெளிய வைத்தாய்

நிகழ்வது
ஒன்றே நாம் நடத்துவது
என தெரிய வைத்தாய்

எக்காலமும் நீயேன இருக்கும் 
என்னை
இக்காலத்தில் இருக்க வைத்தாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக