உயிரால்
உன்னை உருவகித்தேன்
மெய்யால்
உன்னை உருவகிக்கவி்ல்லை
ஏனெனில்
நீ
இல்லாமல் நான் இல்லை
உயிரோடு மெய் கலந்து
உயிர்மெய்யாய் உருவகத்தேன்
என் உயிரே.
உன்னை உருவகிக்க
உயிரும்,
உயிர் மெய்யாய் ஆன
உன்றன் பெயர் மட்டும் போதுமே.
அனைத்து
உருவகங்களுக்கும்
உன் பெயரே
உணர்திடுமே!
மெய் உயிரோடு சேர்ந்தால்தான்
மெய் அழகுரும்
உயிருடன்.
மெய் துடிக்கிறது
உயிருக்காக
மெய்யை மெய் ஆக்க
வருவாய்
என்ற நம்பிக்கையில் ...
இப்படிக்கு
காதலாய்
உன்றன் மெய்
No comments:
Post a Comment